பும்ரா இல்லன்னா இந்தியா ஜெய்ப்பதாக பேசுறவங்களுக்கு இது தெரியாது.. விமர்சனங்களுக்கு சச்சின் பதிலடி

Sachin Tendulkar 5
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. குறிப்பாக கடைசிப் போட்டியில் தோல்வியை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி மிராக்கிள் வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு முகமது சிராஜ் 9 விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

முன்னதாக வித்தியாசமான பவுலிங் ஆக்சனைக் கொண்டிருக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா காயத்தை தவிர்ப்பதற்காக இத்தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி 1, 3, 4வது போட்டிகளில் மட்டுமே விளையாடிய அவர் எஞ்சிய 2 போட்டிகளில் விளையாடவில்லை. ஆச்சரியப்படும் வகையில் அவர் விளையாடாத போட்டிகளில் தான் இந்தியா வெற்றி கண்டுள்ளது.

- Advertisement -

பும்ரா இல்லனா இந்தியா வெற்றி:

சமீப காலங்களாகவே ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ஜஸ்ப்ரித் பும்ரா இல்லாத போட்டிகளில் இந்தியா நிறைய வெற்றிகளைக் குவித்துள்ளது. அவர் விளையாடிய போட்டிகளில் இந்தியா அதிக தோல்விகளை சந்தித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. அதனால் பும்ரா இல்லாமலேயே இந்தியா எளிதாக வெல்வதாக சமூக வலைதளங்களில் கிண்டல்களும் விமர்சனங்களும் காணப்படுகின்றன.

இந்நிலையில் புள்ளிவிவரத்தை மட்டும் வைத்துக்கொண்டு பும்ராவை விமர்சிப்பவர்களுக்கு அவருடைய தரம் தெரியாது என்று ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பதிலடி கொடுத்துள்ளார். இது பற்றி ரெடிட் இணையத்தில் அவர் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா முதல் போட்டியிலேயே 5 விக்கெட்டுகள் எடுத்து இத்தொடரை நன்றாக துவக்கினார்”

- Advertisement -

சச்சின் பதிலடி:

“இரண்டாவது போட்டியில் விளையாடாத அவர் 3, 4வது போட்டியில் விளையாடினார். அந்த இரண்டில் அவர் ஒரு போட்டியில் 5 விக்கெட்டுகள் எடுத்தார். அந்த வகையில் விளையாடிய 3 போட்டிகளில் அவர் 2 முறை 5 விக்கெட்டுகள் எடுத்துள்ளார். ஆனால் அவர் இல்லாத போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றுள்ளதாக மக்கள் விவாதிப்பது பற்றி எனக்குத் தெரியும். என்னைப் பொறுத்த வரை அது வெறும் ஒற்றுமை மட்டுமே”

இதையும் படிங்க: இந்தியா ஜெய்ப்பாங்கன்னு தெரியும்.. ஆனா 20 வருஷத்துக்கு அப்றம் இதை செஞ்சது வேற லெவல்.. கங்குலி பாராட்டு

“ஏனெனில் ஜஸ்ப்ரித் பும்ராவின் தரம் விதிவிலக்கானது. இதுவரை அவரால் செய்ய முடிந்தது அனைத்தும் நம்ப முடியாததாகும். சந்தேகமே இல்லாமல் அவர் சீராக தொடர்ச்சியாக அசத்தக்கூடியவர். எனவே அவரை மற்ற அனைவரையும் விட நான் மேலே வைப்பேன்” என்று கூறினார். மொத்தத்தில் சிறப்பாக செயல்படும் போது பும்ராவை பாராட்டுபவர்கள், தடுமாறும் போது ஆதரவளிக்க தவறுவது குறிப்பிடத்தக்கது.

Advertisement