Breaking : முதல் டி20 போட்டிக்கு முன்னர் கோவிட் பாசிட்டிவ் ரிசல்ட்டால் வாய்ப்பை இழந்த – நட்சத்திர வீரர்

INDvsRSA
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டி இன்று ஜூன் 9-ஆம் தேதி சரியாக 7.00pm மணி அளவில் துவங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்ய தற்போது இந்திய அணியானது பேட்டிங் செய்து வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் எந்தெந்த வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் சரியான கலவையில் இந்திய அணி களமிறங்கியுள்ளது.

toss

- Advertisement -

துவக்க வீரர்களாக இஷான் கிஷன் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும், மிடில் ஆர்டரில் ஷ்ரேயாஸ் அய்யர், ரிஷப் பண்ட், ஹர்டிக் பாண்டியா மற்றும் தினேஷ் கார்த்திக் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். சுழற்பந்து வீச்சாளர்களாக சாஹல் மற்றும் அக்ஷர் பட்டேல் ஆகியோரும் இந்த அணியில் இடம் பிடித்துள்ளனர்.

வேகப்பந்து வீச்சாளராக புவனேஸ்வர் குமார், ஹர்ஷல் படேல் மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் விளையாடுகின்றனர். இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் டி20 கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக 13 போட்டிகளில் வெற்றிபெற்ற முதல் அணி என்ற வரலாற்று சாதனையை நிகழ்த்தும் வாய்ப்பு இந்திய அணிக்கு உள்ளதால் இந்த போட்டியின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது.

markram

இந்நிலையில் இந்த முதலாவது டி20 போட்டிக்கு முன்னதாக தென் ஆப்பிரிக்க அணியின் முன்னணி வீரரான எய்டன் மார்க்ரம்க்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் அவர் இந்த முதல் போட்டிக்கான தென்னாப்பிரிக்க அணியில் இடம்பெறாத முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனை அந்த அணியின் கேப்டன் தெம்பா பவுமாவும் உறுதி செய்து செய்துள்ளார்.

- Advertisement -

கடந்த இரண்டு நாட்களாகவே தாங்கள் நல்ல பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளதாகவும் எதிர்பாராதவிதமாக மார்க்ரம்க்கு கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதால் அவர் இந்த முதலாவது போட்டியில் விளையாட மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : முரட்டு பேட்டிங், மாஸ் பவுலிங் ! 94 வருட உலகசாதனையை தூளாக்கிய மும்பை ரஞ்சி டீம், முழு விவரம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டி20 இன்று துவங்கிய வேளையில் தென் ஆப்பிரிக்கா அணியின் நட்சத்திர வீரரான மார்க்ரம்க்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அந்த அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement