இதான் உங்க நியாயமா? சென்னை பிட்ச்க்கு தண்டனை வழங்கிய ஐசிசி.. டிராவிட் கொதிப்பு

Chepauk Stadium
- Advertisement -

இந்தியாவில் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக 2 வாரங்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 1987, 1996, 2011 ஆகிய வருடங்களைப் போல் அல்லாமல் வரலாற்றிலேயே முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் மட்டுமே நடைபெறும் இந்த தொடரில் உலகின் டாப் 10 அணிகள் கோப்பையை வெல்வதற்காக கடுமையாக போட்டியிட்டு ரசிகர்களையும் மகிழ்வித்து வருகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய மைதானங்களில் இருந்த பிட்ச் மிகவும் சுமாராக இருந்ததாக ஐசிசி ரேட்டிங் தண்டனையை வழங்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவுக்கு எதிரான முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியா 199 ரன்களுக்கு ஆல் அவுட்டாகும் அளவுக்கு சுழலுக்கு சாதகமாக இருந்த சென்னை மைதானமும் பாகிஸ்தான் 191 ரன்களுக்கு சுருண்ட அகமதாபாத் மைதானமும் சுமாராக இருந்ததாக ஐசிசி அறிவித்துள்ளது.

- Advertisement -

ஐசிசிக்கு டிராவிட் பதிலடி:
மற்றபடி எஞ்சிய இந்திய மைதானங்கள் அனைத்தும் நன்று அல்லது மிகவும் நன்றாக இருந்ததாக ஐசிசி ரேட்டிங் வழங்கியுள்ளது. இந்நிலையில் 300 – 350 ரன்களை அடிக்கும் பிட்ச்கள் தான் நன்றாக இருக்கிறது என்று தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் ஐசிசிக்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மேலும் 2022 டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானம் சுமாராக இருந்த போது ஐசிசி அமைதியாக இருந்ததாக தெரிவுக்கும் டிராவிட் இது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தது பின்வருமாறு. “அந்த 2 பிட்ச்களுக்கு சுமார் என்ற ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளதை நான் மரியாதையுடன் ஒப்புக்கொள்ள மறுக்கிறேன். அவை இரண்டுமே நன்றாக இருந்ததாக நான் கருதுகிறேன்”

- Advertisement -

“குறிப்பாக 350 ரன்களை அடித்தால் தான் அது சிறந்த பிட்ச் என்று சொன்னால் அதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. இங்கே அனைவரும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் மட்டுமே அடிப்பதை பார்க்க விரும்புகிறார்கள் என்று அர்த்தமல்ல. ஒருவேளை அது தான் சிறந்த மைதானங்கள் என்றால் பவுலர்கள் ஏன் கிரிக்கெட்டில் இருக்கிறார்கள்? ஏன் ஸ்பின்னர்கள் இருக்கிறார்கள்? என்னை பொறுத்த வரை ஒரு போட்டியில் அனைவரும் தங்களுடைய திறமையை காட்ட வேண்டும்”

இதையும் படிங்க: அஸ்வின் வந்தா பலவீனமாகிடுவோம்.. பாண்டியாவுக்கு பதிலா அவங்கள செல்க்ட் பண்ணுங்க.. கவாஸ்கர் கருத்து

“குறிப்பாக ஜடேஜா பந்து வீசுவது அல்லது வில்லியம்சன் பேட்டிங் செய்வது அல்லது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சவாலான சூழ்நிலையில் விராட் கோலி, ராகுல் பேட்டிங் செய்தது போன்ற தரமான விளையாட்டை நாம் அந்த மைதானங்களில் பார்த்தோம். மேலும் 2022 டி20 உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக (33/9 ரன்களுக்கு சுருண்டு தோற்ற போட்டி) இந்தியா ஸ்விங் மற்றும் வேகம் நிறைந்த சூழலில் விளையாடியது. ஆனால் நாங்கள் அதைப் பற்றி புகார் செய்யவில்லை. அந்த மைதானமும் சுமார் என்று ரேட்டிங் வழங்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement