வார்னர், பாண்டியா, ஷ்ரேயாஸ் 3 வீரர்களையும் மெகா ஏலத்திற்கு முன் எடுத்து கெத்து காட்டவுள்ள – ஐ.பி.எல் அணி

Ahmedabad
- Advertisement -

இந்தியாவில் அடுத்த ஏப்ரல் மாதம் தொடங்கவுள்ள 15-ஆவது ஐபிஎல் சீசனுக்கான எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக அடுத்து சீசனுக்கான களத்தில் 2 புதிய அணிகள் இணைந்துள்ளதால் அந்த இரண்டு அணிகளும் எந்தெந்த வீரர்களை தேர்வு செய்யப் போகிறது என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏற்கனவே இந்த தொடரில் புதிதாக இணையும் இரண்டு அணிகளும் மூன்று வீரர்களை மெகா ஏலத்திற்கு முன்னரே தேர்வு செய்துகொள்ளலாம் என்பதால் இந்த இரு அணிகளும் எந்த வீரர்களை தேர்வு செய்யப் போகிறது என்பது ரசிகர்களிடையே பெரிய அளவில் பேசப்பட்டது.

ipl

- Advertisement -

அந்த வகையில் ஏற்கனவே லக்னோ அணி கே.எல் ராகுல், இஷான் கிஷன் மற்றும் ரஷீத் கான் ஆகியோரை ஒப்பந்தம் செய்யும் என்று கூறப்பட்ட நிலையில் மற்றொரு அணியான அகமதாபாத் அணி டேவிட் வார்னர், ஹார்டிக் பாண்டியா மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை ஒப்பந்தம் செய்யும் என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

இந்த இரண்டு அணிகளும் இம்மாத இறுதிக்குள் தாங்கள் ஒப்பந்தம் செய்யும் வீரர்கள் குறித்த அறிவிப்பை வெளியிடும் என்று தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த மூவரையும் மெகா ஏலத்திற்கு முன்னரே அகமதாபாத் அணி எடுக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதிபடுத்தியுள்ளது என்று கூறலாம்.

iyer

அப்படி வார்னர், பாண்டியா மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஒரே அணியில் விளையாடும் போது நிச்சயம் அந்த அணி லக்னோ அணிக்கு இணையாக பலாமாக திகழும். ஏனெனில் அன்மையில் நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரில் தொடர் நாயகன் விருதை வென்றவர் வார்னர். அதோடு டெல்லி அணிக்காக சிறப்பாக கேப்டன்சி செய்தவர் ஷ்ரேயாஸ் ஐயர்.

- Advertisement -

இதையும் படிங்க : தென்னாப்பிரிக்கா செல்லும் முன் வினோத் காம்பிளியிடம் பயிற்சியெடுத்த 2 வீரர்கள் – எதற்கு இந்த பிராக்டீஸ்?

அது மட்டுமின்றி ஒரு பினிஷராக சர்வதேச அளவில் சிறந்து விளங்கும் ஹார்டிக் பாண்டியா என இந்த மூவரையும் கொண்டு அகமதாபாத் அணி வலுவான ஒரு அணியாக கட்டமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நிச்சயம் இந்த மெகா ஏலம் ஒரு சுவாரசியமான நிகழ்வுகளை தரும் என்பதில் ஐயமில்லை.

Advertisement