
இந்தியாவில் அடுத்த மார்ச் மாதம் இறுதியில் ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் ஆனது நடைபெற உள்ளது. ஏற்கனவே 14 சீசன்கள் முடிவடைந்த நிலையில் தற்போது 15-ஆவது ஐபிஎல் தொடருக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. அதன்படி ஏற்கனவே விளையாடி வரும் 8 அணிகளுடன் அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய நகரங்களை தலைமையாகக் கொண்டு இரு அணிகள் புதிதாக இந்த தொடரில் இணைந்துள்ளன.
இதில் ஏற்கனவே அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகள் தங்களது அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட 3 வீரர்களை அறிவித்த வேளையில் அடுத்ததாக மெகா ஏலத்திலும் கலந்து கொள்ள இருக்கின்றனர். இந்நிலையில் முன்னதாக லக்னோ அணியானது அந்த அணியின் பெயரையும் லோகோவையும் வெளியிட்ட வேளையில் தற்போது அகமதாபாத் அணி தங்களது அணியின் பெயரை வெளியிட்டுள்ளது.
மும்பை அணியில் இருந்து வெளியேறிய ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியாவை கேப்டனாக தேர்ந்தெடுத்த அகமதாபாத் அணி, சுழற்பந்து வீச்சாளரான ரஷீத் கானையும், கொல்கத்தா அணியில் இருந்து வெளியேறிய சுப்மன் கில்லை அணியில் தேர்வு செய்துள்ளது. இதில் ஹர்டிக் பண்டியாவை 15 கோடிக்கும், ரஷீத் கானை 12 கோடிக்கும், சுப்மன் கில்லை 8 கோடிக்கும் வாங்கியுள்ளது.
இந்நிலையில் அகமதாபாத் அணி தங்களது அணியின் பெயரை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. அதன்படி அகமதாபாத் அணியின் பெயராக அகமதாபாத் டைட்டன்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க பிரான்சைஸ் லீக் தொடரில் ஒரு அணியின் பெயர் டைட்டன்ஸ் என்று இருக்கும் வேளையில் தற்போது அகமதாபாத் அளிக்கும் டைட்டன்ஸ் என்ற பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர் தற்போது ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அதோடு அவர்களது அணியின் லோகோவையும் இன்று அந்த அணி நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.
இதையும் படிங்க : INDvsWI : இரண்டாவது ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ – அணியில் மாற்றம்
மெகா ஏலத்தில் கலந்துகொள்ளும் அகமதாபாத் அணி கையிருப்பாக 52 கோடிகளை வைத்துள்ளது. அந்த அணியின் தலைமை பயிற்சியாளராக ஆஷிஷ் நெஹ்ரா செயல்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே மும்பை அணியில் பந்து வீசாமல் இருந்து வந்த பாண்டியா இந்த ஐ.பி.எல் தொடரில் பந்துவீச இருப்பது குறிப்பிடத்தக்கது.