கோலாகலமாக நடைபெற்று முடிந்த 2023 ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி லக்னோவில் நடைபெற்ற லீக் போட்டியில் ஆப்கானிஸ்தான் வீரர் நவீன்-உல்-ஹக் மற்றும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஆகியோருக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது இறுதியில் பெரிய சண்டையாக முடிந்தது. அதை விட போட்டியின் முடிவில் பயிற்சியாளராக இருந்து சண்டையை விலக்காத முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் நெஞ்சோடு நெஞ்சாக மோதும் அளவுக்கு விராட் கோலியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. குறிப்பாக 2013ஆம் ஆண்டு கொல்கத்தாவின் கேப்டனாக சண்டையில் ஈடுபட்ட அவர் 10 வருடங்கள் கழித்தும் பகையை மறக்காமல் லக்னோ அணியின் பயிற்சியாளராக விராட் கோலியுடன் வாக்குவாதம் செய்தது அனைவருக்கும் ஆச்சரியமாகவே அமைந்தது.
இத்தனைக்கும் தலைநகர் டெல்லி மாநிலத்தில் பிறந்து இந்தியாவுக்காக 2011 உலகக்கோப்பை உட்பட பல போட்டிகளில் ஒன்றாக விளையாடிய அவர்கள் இப்படி சண்டை போட்டது பல முன்னாள் வீரர்களை அதிருப்தியடைய வைத்தது. அதிலும் தமது அணி வீரரை திட்டுவது தம்முடைய குடும்பத்தை சீண்டுவதற்கு சமம் என்று வேண்டுமென்றே சண்டை ஈடுபட்ட கௌதம் கம்பீர் அதற்கு முன்பாகவே சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் பெங்களூரு ரசிகர்களை வாய்மீது கை வைத்து அமைதியாக இருக்குமாறு மிரட்டினார்.
வேறென்ன பொறாமை தான்:
அதை விட அந்த நிகழ்வுக்கு பின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விராட் கோலியை ஒரு போட்டியில் அவுட்டாக்கிய ஆஸ்திரேலியாவின் ஜேசன் பெரன்டாப்ஃபை “என்ன ஒரு அற்புதமான வீரர்” என்று கௌதம் கம்பீர் பாராட்டிய நிலையில் பெங்களூருவின் தோல்விகளை மாம்பழத்தை சுவைத்துக் கொண்டே பிரபல ஆப்பிரிக்கன் பத்திரிக்கையாளர் சிரிக்கும் வீடியோவை வெளியிட்டு நவீன் வெறித்தனமாக கொண்டாடினார். இந்நிலையில் தங்களது மாநிலத்திலிருந்து தம்மையே மிஞ்சும் அளவுக்கு 75 சதங்கள் அடித்து இந்தியாவுக்கு நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்து சூப்பர் ஸ்டாராக இருக்கும் விராட் கோலி மீதான பொறாமை தான் கௌதம் கம்பீர் இப்படி சண்டை போட்டதற்கு காரணம் என்று பாகிஸ்தான் வீரர் அகமது சேஷாத் கூறியுள்ளார்.
குறிப்பாக விராட் கோலியின் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாமல் அப்படி செய்த கம்பீர் தாமாக போன் செய்து அவரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவிக்கும் சேஷாத் இது சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கு தன்னுடைய ஆட்டநாயகன் விருதை கௌதம் கம்பீர் கொடுத்த வீடியோவை சிலர் எனக்கு அனுப்பியதை பார்த்தேன். அன்றைய நாளில் விராட் கோலி அந்த விருதை கொடுக்குமாறு சொல்லி கேட்டாரா? அல்லது இப்போது இப்படி அநாகரிகமாக நடந்து கொள்வதற்கான இழப்பீடாக அந்த விருதை அப்போதே கொடுத்தாரா? எப்படி இருந்தாலும் இது போன்ற விஷயங்கள் சிறப்பாக செயல்படாது”
“இதை பார்க்கும் போது கௌதம் கம்பீர் தம்முடைய மொத்த கேரியரில் பெற்றுள்ள மதிப்பை விட விராட் கோலி அதிகமாக பெற்றுள்ளதை ஜீரணிக்க முடியவில்லை என்று தெரிகிறது. அதாவது தம்மை விட அதுவும் இந்த இளம் வயதிலேயே விராட் கோலி பெற்றுள்ள அதிகப்படியான மதிப்பை அவரால் ஜீரணிக்க முடியவில்லை. இந்த சமயத்தில் நவீன்-உல்-ஹக் ஐபிஎல் தொடரில் சச்சின் டெண்டுல்கரை ஸ்லெட்ஜிங் செய்ததாக நினைத்துக் கொள்ளுங்கள். அந்த சமயத்திலும் கௌதம் கம்பீர் இப்படி தான் நடந்து கொள்வாரா? எனவே நாம் விராட் கோலி இந்த தலைமுறையின் கிங் என்று போற்றுவது உங்களுக்கு தெரியும்”
“அவர் 75 சர்வதேச சதங்களை அடித்துள்ளார். நீங்கள் வேண்டுமானால் இதை பெரிய சாதனையாக கருதாமல் இருக்கலாம். ஆனால் கிரிக்கெட்டை விரும்பும் எங்களைப் போன்றவர்கள் அதை சாதனையாக பார்க்கிறோம். எனவே விராட் கோலி மரியாதைக்குரியவர்” என்று கூறினார். மேலும் விராட் கோலியிடம் மன்னிப்பு கேட்க வேண்டுமா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தது பின்வருமாறு.
இதையும் படிங்க:தோனி பாத்து பாத்து உருவாக்கிய 3 மகத்தான வீரர்களின் கரியரை காலிசெய்த விராட் கோலி – அந்த 3 வீரர்களின் லிஸ்ட் இதோ
“இது என்னுடைய வேலையில்லை என்றாலும் நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன். பொதுவாக பார்க்கும் போது இந்த விஷயத்தில் கௌதம் கம்பீர் மீது தவறு இருக்கிறது. எனவே அவர் உன்னதத்தை காட்ட விரும்பினால் விராட் கோலியிடம் தொலைபேசியில் அழைத்து மன்னிப்பு கேட்க வேண்டும். அதை செய்தால் அவர் தன்னுடைய ஆட்டநாயகன் விருதை முதல் முறையாக விராட் கோலிக்கு பரிசளித்ததில் உண்மையான அன்பு இருக்கிறது என்பதை ஏற்றுக்கொள்ளலாம்” என்று கூறினார்.