தோனி பாத்து பாத்து உருவாக்கிய 3 மகத்தான வீரர்களின் கரியரை காலிசெய்த விராட் கோலி – அந்த 3 வீரர்களின் லிஸ்ட் இதோ

Dhoni-kohli
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் எம்எஸ் தோனி உள்ளூர் அளவில் கேப்டன்ஷிப் செய்து அனுபவமில்லாத போதிலும் 2007ஆம் ஆண்டு இளம் வீரர்களை வைத்து முக்கிய நேரத்தில் தைரியமான முடிவுகளை எடுத்து வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையை வென்று காட்டினார். அதே போல் 2010இல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தரவரிசையில் இந்தியாவை நம்பர் ஒன் அணியாக முன்னேற்றிய அவர் கங்குலி உருவாக்கிய வீரர்களை வைத்து சொந்த மண்ணில் 2011 உலக கோப்பையை 28 வருடங்கள் கழித்து வென்றத்துடன் தாம் உருவாக்கிய சுரேஷ் ரெய்னா, விராட் கோலி, ரோஹித் சர்மா, அஸ்வின், ஜடேஜா போன்ற இளம் வீரர்களை வைத்து 2013 சாம்பியன்ஸ் ட்ராபியை வென்றார்.

Hardik-Pandya-and-Dhoni

- Advertisement -

அதனால் 3 விதமான ஐசிசி உலகக் கோப்பைகளை வென்ற ஒரே கேப்டனாக போற்றப்படும் அவர் நிறைய தரமான இளம் வீரர்களை உருவாக்கி இந்தியாவின் வருங்காலம் வளமாக இருப்பதற்கான விதையை போட்டு 2017இல் கேப்டன்ஷிப் பதவியை விராட் கோலியிடம் ஒப்படைத்து சாதாரண வீரராக விளையாடி ஓய்வு பெற்றார். அதை தொடர்ந்து கேப்டனாக வந்த விராட் கோலி இருதரப்பு தொடர்களில் வெளிநாடுகளில் வரலாறு காணாத வெற்றிகளை பெற்றுக்கொடுத்த போதிலும் உலகக் கோப்பையை வென்று கொடுக்காததால் சர்ச்சைக்குரிய முறையில் பதவி விலகினார்.

பொதுவாக தலைமை மாறும் போது அதில் இருப்பவர்கள் தங்களது விருப்பத்திற்கேற்ப தங்களது ஸ்டைலில் செயல்படுவதற்காக தேவையற்ற வீரர்களை கழற்றி விடுவது வழக்கமாகும். அந்த வகையில் தோனி உருவாக்கிய சில வீரர்களை விராட் கோலி கேப்டனாக வந்ததும் கழற்றி விட்டதை பற்றி பார்ப்போம்:

Raina

1. சுரேஷ் ரெய்னா: 2007 – 2015 வரையிலான காலகட்டங்களில் இந்திய பேட்டிங் துறையின் மிடில் ஆர்டரில் முக்கிய வீரராக செயல்பட்ட இவர் 2011 உலக கோப்பையை வெல்வதற்கு ஆற்றிய பங்கை மறக்க முடியாது. இருப்பினும் 2015 உலகக்கோப்பைக்கு பின் தடுமாறிய அவர் 2017இல் கம்பேக் கொடுத்த போதிலும் 2018 இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அசத்த தவறியதால் புதிய கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி கழற்றி விட்டார்.

- Advertisement -

அதே போல் 2014இல் தோனி கேப்டனாக விடைபெற்ற ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துடன் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் ரெய்னாவை ஒதுக்கிய விராட் கோலி மறுவாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்த தோனி மகத்தான வீரராக இன்று ரெய்னா போற்றப்படுவதற்கு தேவையான ஆதரவுகளை கொடுத்ததை யாருக்கும் சொல்லி தெரிய வேண்டியதில்லை.

rahaney

2. அஜிங்க்ய ரகானே: 2011இல் தோனி தலைமையில் அறிமுகமான இவர் 2015 உலகக்கோப்பை வரை வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் முதன்மை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக விளையாடி வந்தார். தோனியின் வளர்ப்பில் 3 விதமான அணியிலும் அந்த காலகட்டத்தில் நிலையான இடத்தை பிடித்து விளையாடிய அவரை முழு நேர கேப்டனாக பொறுப்பேற்றதும் 2018இல் நடைபெற்ற தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் முதலிரண்டு போட்டிகளில் துணை கேப்டனாக இருந்தும் விராட் கோலி அதிரடியாக நீக்கினார்.

- Advertisement -

மேலும் அதே சுற்றுப்பயணத்தில் நடந்த ஒருநாள் தொடர் தான் ரகானே கடைசியாக இந்தியாவுக்கு விளையாடிய வெள்ளைப் பந்து போட்டியாக அமைந்தது. குறிப்பாக 2019 உலகக்கோப்பையில் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தேவையான ஆதரவு கொடுப்போம் என அத்தொடருக்கு முன்பாக தெரிவித்த விராட் கோலி இறுதியில் கழற்றி விட்டு ரஹானேவுக்கு பதிலாக வாய்ப்பு கொடுத்த ராயுடுவையும் இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்லவில்லை.

ashwin

3. ரவிச்சந்திரன் அஸ்வின்: ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் அசத்தியதால் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் வாய்ப்பை கொடுத்த தோனி வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஹர்பஜன் போன்ற சீனியரை கழற்றி விட்டு இவரை வளர்த்தார். அதை சரியாக பயன்படுத்தி 3 வகையான கிரிக்கெட்டிலும் முதன்மை ஸ்பின்னராக உருவெடுத்த அஷ்வினை முழு நேர கேப்டனாக பொறுப்பேற்ற 2017 சாம்பியன்ஸ் டிராபியுடன் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி கழற்றி விட்டார்.

இதையும் படிங்க:124 கிலோ மீட்டர் வேகத்துல பந்துவீசுற அவரெல்லாம் ஒரு பவுலரே இல்ல – இங்கிலாந்து வீரரை விளாசிய மேத்யூ ஹைடன்

அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டிலும் வெளிநாட்டு மண்ணில் சரிபட்டு வர மாட்டார் என்ற கருத்துடன் அஸ்வினை கழற்றி விட்ட விராட் கோலி குல்தீப் யாதவுக்கு வாய்ப்பளிக்க முயற்சித்தார். ஆனாலும் மனம் தளராமல் தொடர்ந்து தனது தரத்தால் கழற்றி விட முடியாத அளவுக்கு ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டு போராடிய அஸ்வின் 2021, 2022 டி20 உலக கோப்பையில் கம்பேக் கொடுத்தார். அதே போல டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜாம்பவானாக செயல்பட்ட போதிலும் விராட் கோலி உருவாக்கிய பிம்பத்தால் வெளிநாட்டு மண்ணில் இதுவரை அவருக்கு நிலையான வாய்ப்பு கிடைக்காதது வேதனையாகும்.

Advertisement