அந்த புதுபையனுக்கு வாய்ப்பில்லை. முதல் போட்டியின் துவக்க வீரர்கள் இவர்கள்தான் – விவரம் இதோ

Rahul
Advertisement

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை மறுதினம் செஞ்சூரியன் மைதானத்தில் துவங்க உள்ளது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஏற்கனவே நியூசிலாந்து தொடரின்போது ஓய்வில் இருந்த பல சீனியர் வீரர்கள் அணியில் இணைந்துள்ளதால் பிளேயிங் லெவனில் எந்தெந்த மாற்றம் இருக்கும் என்பது குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகம் காணப்படுகிறது.

IND

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் தொடக்க வீரர்களாக எந்த இருவர் களமிறங்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. ஏனெனில் இந்த தென்னாப்பிரிக்க தொடருக்கான துவக்க வீரராகவும், துணை கேப்டனாகவும் ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார். இடையில் மும்பையில் நடைபெற்ற வலை பயிற்சியின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அணியில் இருந்து விலகினார்.

- Advertisement -

இதன்காரணமாக கே.எல் ராகுல் டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக அறிவிக்கப்பட்டார் மேலும் ரோகித் சர்மாவிற்கு பதிலாக மாற்று வீரராக பிரியங்க் பன்சால் அறிவிக்கப்பட்டார். முதல்தர கிரிக்கெட்டில் 100 போட்டிகளில் பங்கேற்றுள்ள அவருக்கு துவக்க வீரருக்கான வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் பிரியங்க் பன்சாலுக்கு இடம் கிடைக்காது என்பது தெரியவந்துள்ளது.

Panchal

ஏனெனில் ஏற்கனவே அணியில் முதன்மை துவக்க வீரராக ராகுல் இருப்பதனாலும் நியூசிலாந்து தொடரில் மாயங்க் அகர்வால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதன் காரணமாகவும் அவர்கள் இருவரும் இந்திய அணியின் துவக்க வீரராக விளையாடுவார்கள் என்றும் நிச்சயம் பிரியங்க் பன்சாலுக்கு முதல் போட்டிக்கான இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காது என்பது உறுதியாகியுள்ளது.

இதையும் படிங்க : 23 ஆண்டுகால கிரிக்கெட் வாழ்விற்கு குட்பை சொன்ன ஹர்பஜன் சிங் – ஓய்வை அறிவித்து விடைபெற்றார்

அதுமட்டுமின்றி பிசிசிஐ வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் ராகுல் மற்றும் அகர்வால் ஆகியோர் இணைந்து ஒன்றாக பேட்டியளித்து உள்ளதால் நிச்சயம் அவர்களே துவக்க வீரர்களாக களம் இறங்குவார்கள் என்பது உறுதியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement