என்னைக்கு யுவி போனாரோ அன்னைக்கு ஆரம்பிச்ச அந்த பிரச்சனை இன்னும் தீரல – 2023 உ.கோ முன்பாக ரோஹித் கவலை

Rohit Sharma Yuvraj Singh
- Advertisement -

ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் 2023 ஐசிசி உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாலமாக துவங்குகிறது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இந்த தொடரில் வலுவான அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வென்று 2013க்குப்பின் தொடர்ந்து ஐசிசி தொடர்களில் சந்தித்து வரும் தோல்விகளை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. இருப்பினும் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற முதுகெலும்பு வீரர்கள் அழுத்தமான போட்டிகளில் கைவிடுவது மாறவில்லை என்பது 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் பிரதிபலித்தது.

அது போக 2011 உலக கோப்பையில் கெளதம் கம்பீர், யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா போன்ற இடதுகை வீரர்கள் முக்கிய போட்டிகளின் வெற்றியில் கருப்பு குதிரையாக செயல்பட்ட நிலையில் தற்போதைய அணியில் ரோகித் முதல் பாண்டியா வரை டாப் 6 வீரர்கள் வலது கை பேட்ஸ்மேன்களாக இருப்பது கவலையை ஏற்படுத்தும் அம்சமாக இருக்கிறது. அத்துடன் முதன்மை பவுலராக கருதப்படும் ஜஸ்பிரித் பும்ரா விக்கெட் கீப்பராக கருதப்படும் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரும் இன்னும் காயத்திலிருந்து குணமடையாமல் இருப்பது ரசிகர்களுக்கு மற்றுமொரு கவலையை ஏற்படுத்துகிறது.

- Advertisement -

ரோஹித் சர்மா கவலை:
இவை அனைத்தையும் விட 2019 உலகக்கோப்பையில் அம்பத்தி ராயுடுவை கழற்றி விட்டு தேர்வு செய்யப்பட்ட விஜய் சங்கர் சுமாராக செயல்பட்டு காயமடைந்து வெளியேறிய நிலையில் கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக் ஆகியோருக்கு 4வது இடத்தில் களமிறங்கும் வாய்ப்பைக் கொடுத்து சோதித்து பார்க்கப்பட்டது. ஆனால் அதில் யாருமே காயம் மற்றும் சுமாரான செயல்பாடுகளால் நிலைக்காத நிலையில் ஒரு வழியாக ஸ்ரேயாஸ் ஐயர் 2022 ஒருநாள் போட்டிகளில் 4வது இடத்தில் விளையாடி அதிக ரன்கள் அடித்த இந்திய கிரிக்கெட் வீரராக சாதனை படைத்து அசத்தினார்.

அதனால் பிரச்சனை முடிந்தது என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும் மீண்டும் காயமடைந்த அவர் சுமார் 6 மாதங்களாக விளையாடாமல் இருந்து வருவது இந்தியாவுக்கு பின்னடைவை கொடுக்கிறது. ஆனால் 2019க்குப்பின் 4 வருடங்கள் கடந்தும் ஸ்ரேயாஸ் ஐயர் தவிர்த்து 4வது இடத்தில் விளையாடுவதற்கான பேக்-அப் வீரரை கூட இன்னும் இந்திய அணி நிர்வாகம் உருவாக்கவில்லை என்பது ரசிகர்களை கோபமடைய வைக்கிறது.

- Advertisement -

இந்நிலையில் 2011 உலகக்கோப்பை போன்ற நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்த ஜாம்பவான் யுவராஜ் சிங் ஓய்வுக்குப்பின் 4வது இடத்தில் விளையாடுவதற்கு தகுந்த வீரர் இன்னும் கிடைக்கவில்லை என ரோகித் சர்மா கவலை தெரிவித்துள்ளார். குறிப்பாக அந்த இடத்தில் வாய்ப்பு பெறும் வீரர்கள் ஒன்று சுமாராக செயல்பட்டு அல்லது காயமடைந்து வெளியேறுவதால் 4வது இடத்தில் விளையாடும் வீரரை தங்களால் உருவாக்க முடியவில்லை என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்திய பேட்டியில் பேசியது பின்வருமாறு.

“4வது பேட்டிங் இடத்திற்கான பிரச்சனை நீண்ட காலமாக நிலவுகிறது. குறிப்பாக யுவராஜ் சிங் ஓய்வு பெற்ற பின் அந்த இடத்திற்கு வந்த யாருமே செட்டிலாகவில்லை. ஆனால் ஒரு வழியாக ஸ்ரேயாஸ் ஐயர் அந்த இடத்தில் வாய்ப்பு பெற்று சிறப்பாக செயல்பட்டார். அவருடைய புள்ளிவிவரங்களும் சிறப்பாக இருக்கின்றன. துரதிஷ்டவசமாக காயம் அவருக்கு சில பிரச்சனையை கொடுத்துள்ளது. அதனால் அணியிலிருந்து அவர் நீண்ட நாட்கள் வெளியே இருப்பது போன்ற நிலைமையே கடந்த 4 – 5 வருடங்களாக நீடித்து வருகிறது”

- Advertisement -

“ஏனெனில் அவரைப் போன்ற வீரர்கள் காயமடைந்து வெளியேறும் போது அங்கே புதிய வீரர்கள் வாய்ப்பு பெற்று விளையாடுகின்றனர். மேலும் கடந்த 4 – 5 வருடங்களில் இந்திய அணியில் நிகழ்ந்த காயங்கள் அதிகமாக இருக்கிறது. குறிப்பாக குறிப்பிட்ட சில வீரர்கள் காயமடைந்து வெளியேறினால் நீங்கள் புதிய வீரர்களை சோதிக்க வேண்டியதுயுள்ளது”

இதையும் படிங்க:என்னய்யா இப்டி திட்டுறீங்க? உங்களுக்கு இந்தியாவின் வெற்றி முக்கியமில்லையா – இந்திய ரசிகர்களுக்கு ஹர்ஷா போக்லே பதிலடி

“அது தான் 4வது இடத்தில் பிரச்சனையாக இருக்கிறது என்று நான் சொல்ல வருகிறேன். மேலும் நான் கேப்டனாக இல்லாத போதும் இதுவே நடந்ததல்லவா? அங்கே உள்ளே வந்தவர்களும் வெளியே போனவர்களும் நிறைய பேர் இருந்தார்கள். காயங்கள் அவர்களை விலக்கி வைத்தன அல்லது அவர்கள் விளையாடவில்லை அல்லது ஃபார்மை இழந்தனர்” என்று கூறினார்.

Advertisement