போட்டி முடிந்ததும் சேப்பாக்கம் மைதானத்தில் இருந்த ரசிகர்களுக்காக ஆப்கன் வீரர்கள் செய்த செயல் – நெகிழ்ச்சியான தருணம்

AFG
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 22-வது லீக் போட்டியானது நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அந்தவகையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதனை தொடர்ந்து முதலில் விளையாடி பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்தது. பாகிஸ்தான் அணி சார்பாக பாபர் அசாம் 74 ரன்களையும், அப்துல்லா ஷபிக் 58 ரன்களையும், ஷதாப் கான் மற்றும் இப்திகார் அகமது ஆகியோர் தலா 40 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியானது 49 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை மட்டும் இழந்து 286 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தான அணியை வீழ்த்தி சாதனை படைத்தது. இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி சார்பாக டாப் ஆர்டரில் களமிறங்கிய மூன்று வீரர்களும் அரைசதம் அடித்து அசத்தினர்.

இந்நிலையில் போட்டி முடிந்து ஆப்கானிஸ்தான் அணியின் வீரர்கள் சேப்பாக்கம் ரசிகர்களுக்காக செய்த செயல் தற்போது அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் எப்பொழுதுமே சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறும்போது நல்ல கிரிக்கெட்டுக்கு ரசிகர்கள் ஆதரிக்க தவறியதில்லை.

- Advertisement -

அந்த வகையில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்றாலும் நேரில் வந்த ரசிகர்கள் நன்றாக விளையாடும் அணிக்கு மைதானத்தில் இருந்து தங்களது ஆதரவை தெரிவித்து வந்தனர். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் சிறப்பாக விளையாடும் போது அவர்களை ஆதரித்த ரசிகர்கள் மிகச் சிறப்பாக அவர்களுக்கு ஊக்கம் அளித்து கரகோஷத்தை எழுப்பினர்.

இதையும் படிங்க : இந்தியாவின் 20 வருட சாதனையை உடைத்து.. பாகிஸ்தானை அடக்கிய ஆப்கானிஸ்தான்.. மாபெரும் சாதனை

பின்னர் போட்டி முடிந்து இதனால் நெகிழ்ச்சி அடைந்த ஆப்கானிஸ்தான் வீரர்கள் தங்களுக்காக ஆதரவு வழங்கிய சேப்பாக்கம் ரசிகர்களை மகிழ்விப்பதற்காக மைதானம் முழுவதும் நடந்தவாறு சென்று கைகளை தூக்கி அவர்களுக்கு நன்றி தெரிவித்து விடை பெற்றனர். மேலும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் பலரும் சென்னை மைதானத்தில் ரசிகர்கள் கொடுக்கும் அன்பு போன்று வேறுயெங்கும் கிடைப்பது கிடையாது என்று பெருமையுடன் கூறி சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement