இந்தியாவின் 20 வருட சாதனையை உடைத்து.. பாகிஸ்தானை அடக்கிய ஆப்கானிஸ்தான்.. மாபெரும் சாதனை

PAK vs AFG 2
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தெறிக்க விட்டது. அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 74, அப்துல்லா ஷபிக் 48, சடாப் கான் 40, இப்திகார் அகமது 40 ரன்கள் எடுத்த உதவியுடன் 283 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அதை தொடர்ந்து சேசிங்கை துவக்கிய ஆப்கானிஸ்தானுக்கு ஆரம்பத்திலேயே பாகிஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 130 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து வெற்றியை உறுதி செய்த ஓப்பனிங் ஜோடியில் ரஹமனுல்லா குர்பாஸ் 65, இப்ராஹிம் ஜாட்ரான் 87 ரன்களும் எடுத்து அசத்தினார்கள்.

- Advertisement -

சாதனை வெற்றி:
அதை வீணடிக்காமல் மிடில் ஆர்டரில் ரஹமத்ஷா 77* ரன்களும் கேப்டன் ஷாகிதி 48* ரன்களும் எடுத்து 49 ஓவரிலேயே ஆப்கானிஸ்தானை வெற்றி பெற வைத்தனர். அதனால் ஷாகின் அப்ரிடி மற்றும் ஹசல் அலி தலா 1 விக்கெட் எடுத்தும் பாகிஸ்தான் இத்தொடரில் 3வது தோல்வியை சந்தித்தது. சொல்லப்போனால் உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக 275க்கு மேற்பட்ட இலக்கை கட்டுப்படுத்த முடியாமல் பாகிஸ்தான் தோல்வியை சந்தித்தது.

இதற்கு முன் உலகக் கோப்பையில் 275க்கும் மேற்பட்ட ரன்களை இலக்காக நிர்ணயித்த 13 போட்டிகளில் தங்களுடைய சிறந்த பவுலிங்கை வைத்து தொடர்ச்சியாக வென்று வந்த பாகிஸ்தான் முதல் முறையாக போட்டியில் தோற்றுள்ளது. அந்தளவுக்கு சிறப்பாக செயல்பட்ட ஆப்கானிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட்டில் 7 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானை தோற்கடித்து புதிய வரலாறு படைத்தது.

- Advertisement -

அத்துடன் ஒருநாள் கிரிக்கெட்டில் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கை வெற்றிகரமாக சேசிங் செய்து ஆப்கானிஸ்தான் இந்த போட்டியில் மற்றுமொரு சாதனை படைத்துள்ளது. அந்த பட்டியல்:
1. 283 – பாகிஸ்தானுக்கு எதிராக, சென்னை, 2023*
2. 274 – அமீரகத்துக்கு எதிராக, துபாய், 2014
3. 269 – இலங்கைக்கு எதிராக ஹம்பன்தோட்டா, 2023

இதையும் படிங்க: பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஜெயிக்க அந்த இந்தியர் தான் காரணம் – பாராட்டிய சச்சின்

அதை விட உலகக் கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக அதிகப்பட்ச இலக்கை (283) வெற்றிகரமாக சேசிங் செய்த அணி என்ற இந்தியாவின் மாபெரும் சாதனையையும் உடைத்துள்ள ஆப்கானிஸ்தான் புதிய வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இதற்கு முன் கடந்த 2003 உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் நகரில் சச்சின் டெண்டுல்கர் அதிரடியில் பாகிஸ்தான் நிர்ணயித்தை 274 ரன்கள் இலக்கை இந்தியா வெற்றிகரமாக சேசிங் செய்திருந்ததே முந்தைய சாதனையாகும்.

Advertisement