பாகிஸ்தானை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் ஜெயிக்க அந்த இந்தியர் தான் காரணம் – பாராட்டிய சச்சின்

- Advertisement -

ஐசிசி உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெற்ற லீக் போட்டியில் வலுவான பாகிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் தோற்கடித்து ஆச்சரியத்தை கொடுத்தது. அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 50 ஓவர்களில் 282/6 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபர் அசாம் 74, அப்துல்லா ஷபிக் 58 ரன்கள் எடுத்தனர்.

ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக நூர் அகமது 3 விக்கெட்டுகள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 283 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு 120 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆரம்பத்திலேயே வெற்றியை உறுதி செய்த ஓப்பனிங் ஜோடியில் ரஹமனுல்லா குர்பாஸ் 65 ரன்களும் இப்ராஹிம் ஜாட்ரான் 87 ரன்களும் எடுத்தனர்.

- Advertisement -

சச்சின் பாராட்டு:
அதை வீணடிக்காமல் மிடில் அடரில் ரஹ்மத் ஷா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 77* ரன்களும் கேப்டன் ஷாகிதீன் 48* ரன்களும் எடுத்து 49 ஓவரிலேயே ஆப்கானிஸ்தானை வெற்றி பெற வைத்தனர். அதனால் ஷாஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா 1 விக்கெட் எடுத்தும் பாகிஸ்தான் இத்தொடரில் 3வது தோல்வியை சந்தித்தது. அந்த வகையில் இந்த வெற்றியை ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள்.

ஏனெனில் கத்துக்குட்டியாக பார்க்கப்படும் அந்த அணி ஒருநாள் கிரிக்கெட்டில் 7 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து சரித்திரம் படைத்துள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் ஆப்கானிஸ்தான் பேட்ஸ்மேன்கள் சிங்கிள், டபுள் ரன்களை எடுப்பதற்கு வேகமாக ஓடியதும் கட்டுக்கோப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதுமே வெற்றியை கொடுத்ததாக ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பாராட்டியுள்ளார்.

- Advertisement -

ஆனால் அதன் பின்னணியில் முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா இருப்பதாகவும் கலகலப்புடன் பாராட்டும் அவர் இது பற்றி ட்விட்டரில் பதிவிட்டுள்ளது பின்வருமாறு. “இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடுகள் அபாரத்திற்கு கொஞ்சமும் குறைவில்லாமல் இருக்கிறது. குறிப்பாக பேட்டிங்கில் கட்டுக்கோப்புடன் செயல்படும் அவர்கள் பொறுமையை காட்டுகின்றனர். அதிலும் குறிப்பாக ரன்களை எடுக்க ஆக்ரோசத்துடன் ஓடுவது அவர்களுடைய கடின உழைப்பை காட்டுகிறது”

Sachin Tweet 2

“இது நிச்சயமாக மிஸ்டர் அஜய் ஜடேஜாவின் தாக்கத்தினால் மட்டுமே இருக்க முடியும். நல்ல பவுலிங்கை வைத்து இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் போன்ற வலுவான அணிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வெற்றிகள் ஆப்கானிஸ்தான் அணியின் புதிய வளர்ச்சியை காட்டுகிறது. இவை உலகம் குறித்துக்கொள்ள வேண்டும்” என்று பாராட்டியுள்ளார். அதாவது முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜா இந்த உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தானின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் அஜய் ஜடேஜா ஆப்கானிஸ்தானின் வெற்றியில் முக்கிய பங்காற்றுவதாக சச்சின் பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement