2003 உ.கோ தெ.ஆ அணியின் மெகா சொதப்பலை ரிப்பீட் செய்த ஆப்கன் அணி – தப்பு கணக்கால் வெற்றி பறிப்போன பரிதாபம் இதோ

Afghanistan
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 5ஆம் தேதி நடைபெற்ற கடைசி லீக் போட்டியில் ஆப்கானிஸ்தானை 2 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்த நடப்பு சாம்பியன் இலங்கை கடைசி அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. பாகிஸ்தானின் கஃடாபி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை குசால் மெண்டிஸ் 92, பதும் நிசாங்கா 41, சரித் அஸலங்கா 36 என முக்கிய பேட்ஸ்மேன்களின் தேவையான ரன் குவிப்பால் 50 ஓவரில் 291/8 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக குலாம் நைப் 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதை தொடர்ந்து 37.1 ஓவரில் 292 ரன்கள் எடுத்தால் ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற வாய்ப்பை பெற்ற ஆப்கானிஸ்தானுக்கு ரஹ்மத்துல்லா குர்பாஸ் 4, இப்ராஹிம் ஜாட்ரான் 7 என தொடக்க வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாக அடுத்து வந்த குலாம் நைட் 22 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் மிடில் ஆர்டரில் ராகில் ஷா 45 ரன்களும் கேப்டன் ஷாகிதி 59 ரன்களும் எடுக்க முகமது நபி சரவெடியாக விளையாடிய 65 (32) ரன்கள் விளாசி திருப்பு முனையை ஏற்படுத்திய அவுட்டானார்.

- Advertisement -

அரங்கேறிய சொதப்பல்:
அதை வீணடிக்காத வகையில் ஜனாத் 22 (13) ரன்களும் ரசித் கான் 27* (16) ரன்களும் எடுத்ததால் வெற்றியை நெருங்கிய ஆப்கானிஸ்தானுக்கு 38வது ஓவரின் முதல் பந்தில் 3 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால் அப்போது வந்த முஜிப் உர் ரஹ்மான் டக் அவுட்டானதால் ஆப்கானிஸ்தானின் கனவு நொறுங்கியதாக அந்த அணியினர் மனமடைந்து போனார்கள்.

இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியின் அனலைஸ்ட் 37.1 ஓவரில் இலக்கை எட்ட வேண்டும் என்று மிகப்பெரிய தப்பு கணக்கு போட்டது போட்டி முடிந்த பின்பு தான் தெரிய வந்தது. அதாவது உண்மையான கணக்குப்படி 37.4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் இலக்கை எட்டினால் கூட ரன்ரேட் அடிப்படையில் 4 சுற்றுக்கு செல்ல வேண்டும் என்ற நிலைமை இருந்தது.

- Advertisement -

ஆனால் தங்களுடைய அணியின் அனலைஸ்ட் தவறான கணக்கை கொடுத்ததால் முஜீப் அவுட்டானதும் அடுத்ததாக வந்த பரூக்கி கதை முடிந்ததாக கருதி 37.2, 37.3 ஆகிய 2 பந்துகளில் ரன் எதுவுமே எடுப்பதற்கு முயற்சிக்காமல் தடுப்பாட்டத்தை செய்து 4வது பந்தில் அவுட்டானார். அதனால் 37.4 ஓவரில் ஆப்கானிஸ்தானை 289 ரன்கள் சுருட்டி வென்ற இலங்கை சார்பில் அதிகபட்சமாக கௌசன் ரஜிதா 4 விக்கெட்டுகள் எடுத்தார்.

இருப்பினும் ஒருவேளை அந்த ஓவரில் பரூக்கிக்கு அந்த சரியான கணக்கு முன்கூட்டியே தெரிந்திருந்தால் வந்ததும் சிங்கிள் எடுத்து ஸ்ட்ரைக்கை மாற்றியிருப்பார். அதனால் எதிர்புறம் நல்ல ஃபார்மில் இருந்த ரசித் கான் எப்படியும் 2 ரன்கள் எடுத்து ஆப்கானிஸ்தானை வெற்றி பெற வைத்திருப்பார். சொல்லப்போனால் 37.5வது ஓவரில் 295 ரன்கள் எடுத்திருந்தால் கூட இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளின் ரன் ரேட் சமமாகியிருக்கும். அதனால் வெற்றியாளர் டாஸ் வீசப்பட்டு செய்யப்பட்டிருக்கும் என்பது விதிமுறையாகும்.

இதையும் படிங்க: இந்த உலகக்கோப்பை தான் அவருக்கு கடைசி உலககோப்பையா இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இருப்பினும் ஆப்கானிஸ்தான் அணியின் அனலைஸ்ட் செய்த தவறால் அந்த அணி லீக் சுற்றுடன் வெளியேறியது தற்போது அந்நாட்டு ரசிகர்களை கடுப்பாக வைத்துள்ளது. மேலும் 2003 உலக கோப்பையில் இதே இலங்கைக்கு எதிரான முக்கியமான போட்டியில் கடைசி பந்தில் 1 ரன் தேவை என்பது தெரியாமல் மார்க் பவுச்சர் அடிக்க முயற்சிக்காமல் தடுத்து நிறுத்தியதால் தென்னாபிரிக்கா நாக் அவுட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement