இந்த உலகக்கோப்பை தான் அவருக்கு கடைசி உலககோப்பையா இருக்கும் – ஆகாஷ் சோப்ரா கருத்து

Aakash-Chopra
- Advertisement -

தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பை தொடரை கைப்பற்றி கபில் தேவுக்கு பிறகு 28 ஆண்டுகள் கழித்து ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையின் சாம்பியன் பட்டத்தை வென்று வரலாறு படைத்தது. அதனை தொடர்ந்து 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் உலகக் கோப்பையை தவறவிட்ட இந்திய அணியானது இம்முறை இந்தியாவில் நடைமுறை இருக்கும் 2023-ஆம் ஆண்டு உலக கோப்பையில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றும் முனைப்புடன் காத்திருக்கிறது.

ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட பின்னர் அந்த அணியில் இடம் பெற்றிருந்த வீரர்களே உலகக்கோப்பை தொடரில் இடம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியான உலகக் கோப்பை இறுதிப்பட்டியில் ஆசிய கோப்பைத் தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்களே 15 பேர் கொண்ட அணியில் இடம் பெற்றுள்ளார்கள்.

- Advertisement -

இந்நிலையில் இந்த உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து முன்னாள் வீரர்கள் பலரும் இந்திய அணியின் வீரர்களின் எதிர்காலம் குறித்து சில கருத்துக்களை வெளிப்படையாக பகிர்ந்து வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா எதிர்வரும் 2027-ஆம் ஆண்டு உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் விராட் கோலி விளையாட வாய்ப்பு இல்லை என்று கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : சுப்மன் கில், இஷான் கிஷன், முகமது சிராஜ், பும்ரா ஆகியோர் அடுத்த உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் முக்கிய வீரர்களாக இருப்பார்கள்.

- Advertisement -

ஆனால் விராட் கோலி தற்போது முழு பிட்னசுடன் இருந்தாலும் 2027-ஆம் ஆண்டு வரை அதனை தொடர்வாரா? என்பது என்று கேட்டால் அது சந்தேகம் தான். எனவே இந்த உலகக்கோப்பை தொடரானது விராட் கோலிக்கு கடைசி உலக கோப்பை தொடராக இருக்கும் என்று தெரிவித்தார். அதேபோன்று ஷிகர் தவான் குறித்து பேசிய அவர் : ஷிகர் தவான் இந்த உலகக் கோப்பை தொடரில் அன்லக்கி வீரர்.

இதையும் படிங்க : முழு மூச்சுடன் போராடிய நபி, ரசித் கான் – இலங்கையை அடித்து நொறுக்கியும் நூலிழையில் ஆப்கன் அணி கனவு நொறுங்கியது எப்படி?

ஏனெனில் மிகச்சிறந்த இடதுகை ஆட்டக்காரரான அவர் இந்த உலகக் கோப்பை தொடரில் இடம்பெறாமல் போனது இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு தான். அவரைப் போன்ற அனுபவம் வாய்ந்த வீரர் அணியில் இருக்க வேண்டியது அவசியம். தவான் தன்னுடைய பேட்டிங்கில் எந்த ஒரு குறையும் செய்யவில்லை. ஆனாலும் இந்திய அணியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவரை இந்திய அணியின் நிர்வாகம் கழட்டி விட்டிருக்கலாம் என ஆகாஷ் சோப்ரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement