IND vs AFG : இந்தியாவும் எங்க வீடுங்க.. கோலியுடன் சண்டையில்ல.. ஆனா அவங்கள அடிக்க ரெடியா இருக்கோம்.. ஷாஹிதி பேட்டி

Hasmatullah Shahidhi
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 11ஆம் தேதி தலைநகர் டெல்லியில் நடைபெறும் 9வது டெல்லியில் போட்டியில் வலுவான இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அதில் தங்களுடைய முதல் போட்டியில் வங்கதேசத்திடம் தோற்ற ஆப்கானிஸ்தானை தங்களின் முதல் போட்டியில் வலுவான ஆஸ்திரேலியாவை தோற்கடித்த இந்தியா சொந்த மண்ணில் 2வது வெற்றியை பதிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் போட்டியில் கடந்த ஐபிஎல் தொடரில் மோதிக்கொண்ட விராட் கோலி மற்றும் நவீன்-உல்-ஹக் ஆகியோர் விளையாடுவதும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அண்டை நாடான இந்தியா தங்களுக்கு மற்றொறு வீடு ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மட்டுல்லா ஷாஹிதி வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இந்தியா எங்களின் வீடு:
அதனால் விராட் கோலிக்கும் தங்கள் நாட்டு வீரர் நவீனுக்கும் எவ்விதமான சண்டையும் இல்லை என்று கூறும் அவர் ரசித் கான் போன்ற தரமான ஸ்பின்னர்களை வலைப்பயிற்சியில் எதிர்கொண்டுள்ளதால் குல்தீப் போன்ற இந்திய ஸ்பின்னர்களை சிறப்பாக எதிர்கொள்வோம் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இது பற்றி போட்டி துவங்குவதற்கு முன் அவர் பேசியது பின்வருமாறு.

“இந்தியா எங்களுடைய வீடாகவே இருந்து வருகிறது. ஏனெனில் நாங்கள் நிறைய விளையாடி வருகிறோம். அதே போல இந்திய மக்களும் ஆப்கானிஸ்தான் மக்களை விரும்புகின்றனர். பொதுவாக களத்தில் இந்தியா அல்லது ஆப்கானிஸ்தான் என்பதை தாண்டி ஒவ்வொரு வீரர்களுக்கும் சில நேரங்களில் ஆக்ரோஷம் வருவது இயல்பாகும். அது அனைவருக்கும் நடந்துள்ளது”

- Advertisement -

“ஆனால் எங்களுடைய வீரர்களில் பெரும்பாலானவர்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் போன்ற இந்திய ஜாம்பவான்களையே ரோல் மாடலாக வைத்திருக்கின்றனர். மேலும் நாங்கள் ரசித் கான், முகமத் நபி, முஜீப் உர் ரஹ்மான் போன்றவர்களை தினந்தோறும் வலைப்பயிற்சியில் எதிர்கொள்கிறோம். அதன் காரணமாக நாங்கள் சுழல் பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொள்ளும் அணியாகவே இருக்கிறோம் என்று நம்புகிறேன். இருப்பினும் கடந்த போட்டியில் நாங்கள் தடுமாறியது உண்மை என்றாலும் ஒரு போட்டியை வைத்து நீங்கள் அனைத்தையும் மதிப்பிட முடியாது”

இதையும் படிங்க: தோனி இல்லனா இவரோட கரியரே க்ளோஸ் ஆயிடும் போல இருக்கே – ரசிகர்களின் கேலிக்கு ஆளான பதிரானா

“எனவே அடுத்த போட்டியில் நாங்கள் அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாட முயற்சிப்போம். மேலும் ரசித் கான் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் சிறந்த ஸ்பின்னராக இருக்கிறார். அதனால் கடந்த போட்டிகளில் அவர் தடுமாறியதை பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. எனவே மிகவும் தரமான அவர் தன்னுடைய நாளில் எந்த எதிரணியையும் திணறடிப்பார் என்பதில் சந்தேகமில்லை. எனவே இப்போட்டியில் நல்ல திட்டங்களை தீட்டி அவர் எங்களுக்கு சிறப்பாக செயல்படுவார் என்று நம்புகிறேன்” என கூறினார்.

Advertisement