தோனி இல்லனா இவரோட கரியரே க்ளோஸ் ஆயிடும் போல இருக்கே – ரசிகர்களின் கேலிக்கு ஆளான பதிரானா

Pathirana-and-Dhoni
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 8-ஆவது போட்டியானது நேற்று ஹைதராபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியானது 344 ரன்கள் குவித்தும் பாகிஸ்தான் அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியில் சந்தித்தது ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக இலங்கை அணி சார்பாக பந்துவீசிய மதீஷா பதிரானா மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி 9 ஓவர்களில் 90 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரே விக்கெட்டை மட்டும் வீழ்த்தினார்.

நட்சத்திர வீரரான இவர் எதிரணிகளுக்கு அச்சுறுத்தலை தருவார் என்று பார்க்கப்பட்டு வரும் வேளையில் நேற்று இலங்கை அணி பவுலிங் செய்தபோது மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தினார். அதிலும் குறிப்பாக இலங்கை அணி சார்பாக வீசப்பட்டிருந்த 26 உதிரிகளில் 18 வொயிடுகளை பதிரானா மட்டுமே வீசி இருந்தார். இப்படி இவரது மோசமான செயல்பாடு இந்த போட்டியில் மட்டுமின்றி தென்னாப்பிரிக்க போட்டியிலும் வெளிச்சத்திற்கு வந்திருந்தது.

- Advertisement -

பதிரானா வித்தியாசமான ஆக்ஷனில் பந்து வீசினாலும் அவரது பந்துவீச்சில் அதிக வொயிடுகள் செல்கின்றன. இவற்றை பதிரானா கூடிய விரைவில் சரி செய்யவில்லை எனில் நிச்சயம் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரது கரியர் முடிவுக்கு வந்துவிடும் என்றே தெரிகிறது. இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் அட்டகாசமான பந்துவீச்சை வெளிப்படுத்திய அவரை பாராட்டிய தோனி : பதிரானா போன்ற வித்தியாசமாக பந்துவீசும் வீரர்களுக்கு அதிக பணிச்சுமை வழங்கக்கூடாது என்றும் அதனால் அவரை ரெட்பால் கிரிக்கெட்டில் விளையாடக்கூடாது.

ஐசிசி தொடர்களிலும் முக்கியமான போட்டிகளில் தான் அவரை விளையாட வைக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியிருந்தார். ஆனால் தற்போது இலங்கை அணி தொடர்ச்சியாக பதிரானாவை ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாட வைத்து வருகிறது. அதோடு அவரை சரியாக கையாள தோனியை போன்ற ஒரு ஆள் இல்லை என்பதனாலே அவர் இப்படி இருக்கிறார் என்றும் தோனி போன்ற ஒரு கேப்டன் இல்லை என்றால் பதிரானாவின் கரியர் காலியாகிவிடும் என்றும் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

- Advertisement -

பதிரானா சற்று மோசமாக பந்து வீசினால் தோனி களத்திலேயே அவருக்கு அறிவுரைகளை கூறி நம்பிக்கை கொடுத்து அவரை சிறப்பாக பந்துவீச வைப்பார். ஆனால் ஷானகா அவர் எப்படி பந்து வீசினாலும் அவர் அருகில் கூட செல்வது கிடையாது. தோனி போன்ற ஒரு கேப்டன் இருந்தால் மட்டுமே பதிரானாவை சரியாக கையாள முடியும் என்றும் அப்படிப்பட்ட வீரர் இல்லை என்றால் நிச்சயம் பதிரானா விரைவில் இலங்கை அணியில் தனது வாய்ப்பை இழப்பார் என்றும் ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இதையும் படிங்க : வீடியோ : ஹைதராபாத் மைதான பராமரிப்பாளர்களுக்கு மரியாதை செய்த பாக் கேப்டன் பாபர் அசாம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

ரசிகர்கள் கூறுவது போன்ற ஒரு சில பந்துகளை பதிரானா சிறப்பாக வீசினாலும் ஒரு சில பந்துகளை லைன் மாற்றி வீசும்போது அழுத்தத்திற்கு வந்து பதட்டம் அடைந்து தொடர்ச்சியாக மோசமான பந்துகளை வீசுகிறார் என்பதே நிதர்சனமான உண்மை. இந்த பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டி மட்டுமின்றி கடந்த தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான போட்டியிலும் அவர் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் விட்டுக்கொடுத்து மோசமான பந்துவீச்சை வெளிப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement