ஹைதராபாத் மைதான பராமரிப்பாளர்களுக்கு மரியாதை செய்த பாக் கேப்டன் பாபர் அசாம்.. ரசிகர்கள் நெகிழ்ச்சி

Babar Azam
- Advertisement -

ஐசிசி உலக கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 10ஆம் தேதி நடைபெற்ற 8வது லீக் போட்டியில் இலங்கையை அடித்து நொறுக்கிய பாகிஸ்தான் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஹைதராபாத் நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 50 ஓவர்களில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 344/9 ரன்கள் குவித்து அசத்தியது.

அந்த அணிக்கு அதிகபட்சமாக குசால் மெண்டிஸ் 122 ரன்களும் சமரவிக்கிரமா 108 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹசான் அலி 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதைத்தொடர்ந்து 345 என்ற கடினமான இலக்கை துரத்திய பாகிஸ்தானுக்கு இமாம்-உல்-ஹக் 12, கேப்டன் பாபர் அசாம் 10 ரன்களில் அவுட்டாகி ஆரம்பத்திலேயே பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

பாபரின் பரிசு:
அதனால் 37/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்று தடுமாறிய அந்த அணிக்கு மறுபுறம் அசத்தலாக பேட்டிங் செய்த மற்றொரு துவக்க வீரர் அப்துல்லா ஷபிக் உலகக் கோப்பையில் அறிமுக போட்டியிலேயே சதமடித்த பாகிஸ்தான் வீரராக சாதனை படைத்து 113 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவருடன் கடைசிவரை அவுட்டாகாமல் மிரட்டிய முகமது ரிஸ்வான் சதமடித்து 131* ரன்களும் சௌத் சாக்கீல் 31, இப்திகார் அகமது 22* ரன்கள் எடுத்தனர்.

அதனால் 48.2 ஓவரிலேயே 345/4 ரன்கள் எடுத்த பாகிஸ்தான் உலகக்கோப்பையில் அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்த அணியாக உலக சாதனை படைத்தது. மறுபுறம் சுமாராக செயல்பட்ட இலங்கை சார்பில் அதிகபட்சமாக மதுசங்கா 2 விக்கெட் எடுத்தார். அந்த வகையில் 2 போட்டிகளில் 2வது வெற்றி பெற்ற பாகிஸ்தான் இந்த உலக கோப்பையில் வலுவான துவக்கத்தை பெற்றுள்ளது.

- Advertisement -

அதை விட போட்டி முடிந்ததும் ஹைதராபாத் மைதான பராமரிப்பாளர்கள் அனைவரையும் மைதானத்திற்குள் வர வைத்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் தங்களுடைய வீரர்கள் கையொப்பமிட்ட ஜெர்சியை அன்பு பரிசாக வழங்கினார். அதாவது 7 வருடங்கள் கழித்து முதல் முறையாக இந்தியாவுக்கு வந்துள்ள பாகிஸ்தான் அணியினர் ஹைதராபாத் மைதானத்தில் 2 பயிற்சி போட்டிகள் மற்றும் 2 முதன்மை போட்டிகளில் விளையாடியது.

அதில் பயிற்சி போட்டிகளில் தோற்றாலும் முதன்மை போட்டியில் வென்ற பாகிஸ்தான் சிறப்பான துவக்கத்தை பெற்றுள்ளது. அந்த வகையில் இம்மைதானத்தில் நேற்று உலக சாதனை படைக்கும் அளவுக்கு நல்ல வசதிகளை செய்து கொடுத்து சிறப்பாக விளையாடுவதற்கு உதவிய மைதான பராமரிப்பாளர்களுக்கு பாபர் அசாம் தாமாக சென்று ஜெர்சியை பரிசை வழங்கியது இந்திய ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைத்தது. மேலும் அவருடன் ஹைதராபாத் மைதான பராமரிப்பாளர் அனைவரும் புகைப்படம் எடுத்து ஆட்டோகிராப் வாங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Advertisement