சென்னையில் தரமான சம்பவம் செய்த ஆப்கானிஸ்தான்.. பாகிஸ்தானை பந்தாடி மாபெரும் சரித்திர சாதனை வெற்றி

- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் அக்டோபர் 23ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் 23ஆம் தேதி மதியம் 2 மணிக்கு நடைபெற்ற 23வது லீக் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அதில் வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய பாகிஸ்தான் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

அதைத்தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு அப்துல்லா சபிக்குடன் 56 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த இமாம்-உல்-ஹக் தடுமாற்றமாக செயல்பட்டு 17 ரன்களில் அவுட்டானார். அந்த நிலைமையில் வந்த கேப்டன் பாபர் அசாம் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் எதிர்புறம் சிறப்பாக விளையாடி அரைச்சதம் கடந்த அப்துல்லா சபிக்கை 58 ரன்களில் அவுட்டாக்கிய நூர் அகமது அடுத்ததாக வந்த முகமது ரிஸ்வானை 8 ரன்களில் பெவிலியன் அனுப்பி வைத்தார்.

- Advertisement -

அந்த நிலைமையில் களமிறங்கி நிதானமாக விளையாட முயற்சித்த சவுத் ஷாக்கில் 25 ரன்களில் அவுட்டாக மறுபுறம் தொடர்ந்து போராடிய கேப்டன் பாபர் அசாம் அரை சதமடித்து 74 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதை பயன்படுத்தி டெத் ஓவர்களில் அதிரடியாக விளையாடிய இப்திகார் அகமது 40 (27) ரன்களும் சடாப் கான் 40 (38) ரன்களும் எடுத்ததால் 50 ஓவர்களில் பாகிஸ்தான் 282/7 ரன்கள் எடுக்க ஆப்கானிஸ்தான் அதிகபட்சமாக நூர் அஹ்மத் 3, நவீன்-உல்-ஹக் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதைத்தொடர்ந்து 283 ரன்களை துரத்திய ஆப்கானிஸ்தானுக்கு ரஹ்மனுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் ஜாட்ரான் ஆகியோர் பவர்பிளே ஓவர்களை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே அதிரடியான ரன் குவிப்பில் ஈடுபட்டனர். அதில் இப்ராஹிம் சற்று நிதானமாக விளையாடிய நிலையில் மறுபுறம் ஷாஹீன் அப்ரிடி, ஹரிஷ் ரவூப் போன்ற தரமான பவுலர்களை அதிரடியாக எதிர்கொண்ட குர்பாஸ் 130 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து ஆப்கானிஸ்தானுக்கு அற்புதமான துவக்கத்தை கொடுத்து 65 (53) ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

அந்த நிலையில் வந்த ராகில் ஷா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் மறுபுறம் அரை சதம் கடந்து தொடர்ந்து அசத்திய இப்ராஹிம் பாகிஸ்தானுக்கு பெரிய சவாலாக மாறி 10 பவுண்டரியுடன் 87 (113) ரன்களில் அவுட்டாகி சென்றார். அந்த நிலைமையில் வந்த கேப்டன் ஷாகிதியும் பாகிஸ்தானுக்கு வளைந்து கொடுக்காமல் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெற்றி பாதைக்கு அழைத்து வந்தார்.

இதையும் படிங்க: சென்னையில் தரமான சம்பவம் செய்த ஆப்கன்.. பாகிஸ்தானை பந்தாடி மாபெரும் சரித்திர சாதனை வெற்றி

அந்த வகையில் போட்டியை கடைசி வரை எடுத்துச் சென்ற இந்த ஜோடியில் ரஹீல் ஷா 77* (84) ரன்களும் ஷாஹிதி 48* (45) ரன்களும் எடுத்ததால் 49 ஓவரிலேயே 286/2 ரன்கள் எடுத்த ஆப்கானிஸ்தான் 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் வாயிலாக ஒருநாள் கிரிக்கெட்டில் 7 தொடர் தோல்விகளுக்கு பின் முதல் முறையாக பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து ஆப்கானிஸ்தான் மாபெரும் சரித்திர சாதனை படைத்தது. அதனால் ஷாஹீன் அப்ரிடி, ஹசன் அலி தலா 1 விக்கெட் எடுத்தும் பாகிஸ்தான் 3வது தோல்வியை சந்தித்து செமி ஃபைனல் வாய்ப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது.

Advertisement