என்னடா இது பாகிஸ்தானுக்கு வந்த சோதனை. உண்மையிலே அவங்க ரொம்ப பாவம்தான்பா – நடந்தது என்ன?

PAK-vs-AFG
- Advertisement -

இந்தியாவில் கடந்த அக்டோபர் 5-ஆம் தேதி துவங்கிய ஐசிசி-யின் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரானது தற்போது விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்த தொடரின் லீக் சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வரும் வேளையில் இந்த தொடருக்கான அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்யும் அணிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வருவது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏனெனில் இதுவரை அவர்கள் விளையாடிய நான்கு லீக் ஆட்டங்களில் இரண்டு வெற்றி மற்றும் இரண்டு தோல்விகளுடன் ஐந்தாவது இடத்தை பிடித்திருந்தாலும் அவர்களது ஆட்டம் மிகவும் சுமாராகவே இருந்து வருகிறது.

- Advertisement -

குறிப்பாக ஆசிய கோப்பை தொடரின் போது எதிர்வரும் 50 ஓவர் உலக கோப்பை தொடரில் ஆதிக்கம் செலுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் பந்துவீச்சாளர்கள் இந்த தொடர் முழுவதுமே பரிதாபத்திற்குரிய வகையில் பந்துவீசி வருகின்றனர். அதுவே பாகிஸ்தான் அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியுள்ளது.

அதிலும் குறிப்பாக இன்று அக்டோபர் 23-ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான 22-ஆவது லீக் போட்டி நடைபெற்று வரும் வேளையில் இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 50 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் குவித்தது.

- Advertisement -

அதனைத்தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தான் அணியானது 283 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இவ்வேளையில் இவ்வளவு பெரிய இலக்கினை நிர்ணயித்துள்ள பாகிஸ்தான் அணி அவர்களது பந்து வீச்சாளர்களை வைத்து ஆப்கானிஸ்தான் அணியை திணற விடும் என்றே பலரும் எதிர்பார்த்தனர். ஆனால் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களையும் சரி, சுழற்பந்து வீச்சாளர்களையும் சரி சிறப்பாக எதிர்கொண்ட ஆப்கானிஸ்தான் வீரர்கள் அற்புதமான துவக்கத்தை அளித்தனர்.

இதையும் படிங்க : பாண்டியா வந்ததும் அவர பெஞ்சில் உட்கார வெச்சு மறுபடியும் தப்பு பண்ணாதீங்க.. இந்திய அணிக்கு கம்பீர் அறிவுரை

அதிலும் குறிப்பாக முதல் விக்கெட்டுக்கு ஆப்கானிஸ்தான் அணி 130 ரன்கள் சேர்த்து பலமான அடித்தளம் அமைத்ததால் தற்போது ஆப்கானிஸ்தான் அணியானது தங்களது இரண்டாவது வெற்றியை நோக்கி பயணித்து வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் இந்த தொடரில் சோபிக்காமல் போனது உண்மையிலேயே வருத்தமான விடயமாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement