- Advertisement -
உலக கிரிக்கெட்

37 எஸ்ட்ராஸ்.. ஆஸி 3வது மோசமான சாதனை.. ஆப்கானிஸ்தான் வீரரிடம் நேர்மையை காட்டிய ஸ்மித்.. நடந்தது என்ன?

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் பிப்ரவரி 28ஆம் தேதி லாகூரில் பத்தாவது லீக் போட்டி நடைபெற்றது. இதில் வலுவான ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 50 ஓவரில் போராடி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 273 ரன்கள் எடுத்தது.

அந்த அணிக்கு குர்பாஸ் 0, இப்ராஹிம் ஜாட்ரான் 22, ரஹ்மத் ஷா 12, கேப்டன் சஹாதி 20, நபி 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தைக் கொடுத்தனர். இருப்பினும் செதிகுல்லா அடல் நேர்த்தியாக விளையாடி அதிகபட்சமாக அரை சதமடித்து 85 ரன்கள் குவித்தார். அவருடன் ஓமர்சாய் அதிரடியாக 67 ரன்கள் குவித்து அசத்தினார்.

- Advertisement -

37 எக்ஸ்ட்ராஸ் ரன்கள்:

ஆஸ்திரேலியாவுக்கு அதிகபட்சமாக பென் துவாரீஸ் 3, ஸ்பென்சர் ஜான்சன் ஆடம் ஜான்பா தலா 2 விக்கெட்டுகளை எடுத்தார்கள். இருப்பினும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 17 ஒய்ட், 15 லெக் பைஸ், 5 பைஸ் உட்பட 37 எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கியது. இதன் வாயிலாக சாம்பியன்ஸ் டிராபியில் ஒரு போட்டியில் மூன்றாவது அதிக எக்ஸ்ட்ரா ரன்களை வழங்கிய அணி என்ற மோசமான சாதனையை ஆஸ்திரேலியா படைத்தது.

அந்தப் பட்டியலில் இந்தியா மற்றும் நெதர்லாந்து அணிகள் முறையே 2004, 2002 சாம்பியன்ஸ் ட்ராபியில் கென்யா, இலங்கைக்கு எதிராக 42, 38 எக்ஸ்ட்ராக்களை வழங்கி முதல் 2 இடங்களில் உள்ளன. தற்போது 37 எக்ஸ்ட்ராக்களை வழங்கிய ஆஸ்திரேலியா 3வது இடத்தில் இருக்கிறது. முன்னதாக இந்தப் போட்டியில் 47வது ஓவரை ஆஸ்திரேலிய வீரர் நாதன் எலிஸ் வீசினார். அதை எதிர்கொண்ட ஓமர்சாய் சிங்கிள் எடுத்தார்.

- Advertisement -

ஸ்மித்தின் பெருந்தன்மை:

அவருக்கு எதிர்ப்புறம் இருந்து ஓடி வந்து ரன்னை முழுமை செய்த நூர் அகமது ஓவர் முடித்ததாக நினைத்துக் கொண்டு வெள்ளைக்கோட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அதுவரை பந்து விக்கெட் கீப்பர் கைக்கு வராததால் அது காலாவதியாகவில்லை. அதை கவனிக்காமல் நூர் அகமது வெளியேறினார். மறுபுறம் அதை சரியாகக் கவனித்த ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி பந்தை பிடித்து அவரை ரன் அவுட் செய்தார்.

இதையும் படிங்க: கங்குலி, டிராவிட், தவான் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

விதிமுறைப்படி அதற்கு நடுவரும் அவுட் கொடுத்து விட்டார். ஆனால் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தெரியாதத்தனமாக நூர் அகமது வெளியேறியதால் அந்த விக்கெட்டை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார். அதை நடுவரும் ஏற்றுக்கொண்டதால் நூர் அஹ்மத் தொடர்ந்து விளையாடினார். அந்த வகையில் சரியாக கவனிக்காமல் அவுட்டான ஆப்கானிஸ்தான் வீரரிடம் ஸ்மித் பெருந்தன்மையுடன் நேர்மைத் தன்மையை காண்பித்தது ரசிகர்களிடம் பாராட்டுகளை பெற்றது.

- Advertisement -