கங்குலி, டிராவிட், தவான் ஆகியோரது சாதனையை முறியடிக்க காத்திருக்கும் விராட் கோலி – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான விராட் கோலி சமீபகாலமாகவே பேட்டிங் ஃபார்ம் இன்றி தடுமாறி வந்த வேளையில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது அவருக்கு மிக முக்கியமான தொடராக பார்க்கப்பட்டது. பெரிய வீரரான அவருக்கு இது போன்ற ஃபார்ம் தடுமாற்றம் எல்லாம் தற்காலிகமானது தான் என்பதை மீண்டும் ஒருமுறை அவர் இந்த தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் கம்பேக் கொடுத்து நிரூபித்துள்ளார்.

விராட் கோலி நிகழ்த்தவிருக்கும் அசத்தல் சாதனை :

அந்த வகையில் நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கு எதிராக நல்ல துவக்கத்தை பெற்றிருந்தாலும் பெரிய ரன் குவிப்பை வழங்க முடியாமல் போன அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி இறுதிவரை ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

- Advertisement -

அதோடு மட்டுமின்றி ஒருநாள் கிரிக்கெட்டில் தனது 51 வது சதத்தையும் பதிவு செய்து ஆட்டநாயகன் விருதினை பெற்றிருந்தார். இந்நிலையில் எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அவர் இந்திய அணி சார்பாக மிக முக்கியமான ஒரு சாதனையை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் நிகழ்த்தும் வாய்ப்பினை பெற்றுள்ளார்.

அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி வரலாற்றில் இதுவரை 50 ரன்களுக்கு மேல் அதிக முறை குவித்த வீரர்களாக சச்சின், கங்குலி, தவான் ஆகியோர் முதலிடத்தில் உள்ளனர். மூவருமே 50 ரன்கள் மேல் ஆறு முறை ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடித்திருக்கின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் தற்போது ஒரு சதம் மற்றும் ஐந்து அரைசதம் என ஆறு முறை 50 ரன்களுக்கு மேல் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அடித்து அவர்களது சாதனையை சமன் செய்துள்ள விராட் கோலி எதிர்வரும் நியூசிலாந்து அணிக்கு எதிராக போட்டியில் மேலும் ஒரு 50 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அதிக முறை 50க்கும் மேற்பட்ட ரன்களை அடித்த இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.

இதையும் படிங்க : அடுத்த போட்டியில் வாஷிங்டன் சுந்தரை சேர்க்க சொல்லி ரசிகர்கள் மத்தியில் வலுக்கும் ஆதரவு – எதற்கு தெரியுமா?

இந்திய அணி அரையிறுதி போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு சென்றால் மேலும் 2 போட்டிகள் கூடுதலாக கிடைக்கும் என்பதால் இந்த தொடரில் விராட் கோலி மிகப்பெரிய பல சாதனைகள் நிகழ்த்தும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement