இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2025 ஆம் ஆண்டு நடப்பு சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான குரூப் ஏ பிரிவின் கடைசி லீக் ஆட்டமானது எதிர்வரும் மார்ச் 2-ஆம் தேதி துபாய் மண்ணில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தோல்வியையே சந்திக்காமல் அரையிறுதிக்கு செல்ல இந்திய அணி தற்போது முழு வீச்சுயுடன் தயாராகி வருகிறது.
வாஷிங்டன் சுந்தருக்கு பெருகும் ஆதரவு :
அதே போன்று இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி முதலிடத்தை பிடித்து அரையிறுதிக்கு செல்ல நியூசிலாந்து அணியும் தயாராகி வருவதால் இந்த போட்டியானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய இந்திய அணி இந்த போட்டியில் முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வளித்து புதிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கும் என்றும் தெரிகிறது. அந்த வகையில் ஏற்கனவே சிறிது அசவுகரியத்தை சந்தித்துள்ள ரோகித் சர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்க திட்டமிட்டுள்ள நிர்வாகம் அவர்களுக்கு பதிலாக ரிஷப் பண்ட் மற்றும் அர்ஷ்தீப் சிங் ஆகியோரை விளையாட வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் சுரப்பந்து வீச்சாளர்களான ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகிய மூவரில் ஒருவருக்கு ஓய்வு வழங்கி அவருக்கு பதிலாக தமிழக சுழற்பந்து வீச்சாளரான வாஷிங்டன் சுந்தரை அணியில் இணைக்க வேண்டும் என்று ரசிகர்கள் மத்தியில் தற்போது ஆதரவு பெருகி வருகிறது.
ஏனெனில் நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்த போட்டியில் இடது கை ஆட்டக்காரர்கள் அந்த அணியில் அதிகளவு இருப்பதால் அவர்களை எதிராக சவால் அளிக்கும் வகையில் பந்துவீச ஒரு வலதுகை ஆப் ஸ்பின்னர் தேவை என்பதால் மூவரில் ஒருவருக்கு கொடுத்துவிட்டு ஆல்ரவுண்டான வாஷிங்டன் சுந்தரை அணியில் சேர்க்குமாறு ரசிகர்கள் கோரிக்கை வைத்திருக்கின்றனர்.
இதையும் படிங்க : ஓய்வு நாளிலும் அர்ப்பணிப்பை காட்டிய சுப்மன் கில்.. நெகிழவைத்த துணைக்கேப்டனின் செயல் – விவரம் இதோ
அவர்களது இந்த கோரிக்கைக்கான முடிவை எடுக்கும் பொறுப்பு பயிற்சியாளர் கம்பீர் மற்றும் கேப்டனிடம் மட்டுமே உள்ளதால் அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பது போட்டி நாள் அன்றே தெரிய வரும் என்பது குறிப்பிடத்தக்கது.



