நடப்பு 2025-ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள சுப்மன் கில் இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தனது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரது மத்தியில் பாராட்டுகளை பெற்று வருகிறார். ஏற்கனவே அண்மையில் நடைபெற்று முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
சுப்மன் கில்லின் அர்ப்பணிப்பு :
அதனைத்தொடர்ந்து தற்போது இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரின் முதல் போட்டியில் வங்கதேச அணிக்கெதிராக 101 ரன்களையும், பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் 46 ரன்களையும் குவித்திருந்தார். தற்போது மிகச் சிறப்பான ஃபார்மில் இருக்கும் சுப்மன் கில் அடுத்து வரும் சில போட்டிகளிலும் இந்திய அணிக்காக அசத்தும் பட்சத்தில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது.
அந்த வகையில் இந்திய வீரர்கள் தற்போது அனைவரும் பயிற்சியை தீவிரப்படுத்தி உள்ள வேளையில் சுப்மன் கில்லும் தனிப்பட்ட பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் ஒருநாள் இந்திய வீரர்களுக்கு பயிற்சியில் இருந்து விடுப்பு அளிக்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்திய வீரர்கள் பலரும் ஹோட்டல் அறையிலும், வெளியிடங்களுக்கு சென்றும் தங்களது நேரத்தை செலவிட்டனர்.
ஆனால் துணை கேப்டன் சுப்மன் கில் செய்த செயல் ஒன்று தற்போது அனைவரது மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது மற்ற வீரர்கள் அனைவரும் இந்த ஒருநாள் விடுப்பை எடுத்துக் கொண்டு தங்கள் இஷ்டத்திற்கு வெளியே சென்ற வேளையில் சுப்மன் கில் மட்டும் இந்த ஒரு நாள் ஓய்வு தனக்கு வேண்டாம் என்றும் கூறிவிட்டாராம்.
தனது தனிப்பட்ட பேட்டிங் டெக்னிக்கில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதனால் த்ரோ டவுன் ஸ்பெசலிஸ்ட் உதவியோடு ஐசிசி கிரிக்கெட் அகாடமியில் பயிற்சி மேற்கொண்டார் என்று கூறப்படுகிறது. பல மணி நேரங்களாக பயிற்சி செய்த சுப்மன் கில் நிறைய பந்துகளை எதிர் கொண்டு அடுத்த போட்டிக்காக தீவிரமாக தயாராகும் முயற்சியிலேயே இந்த விடுமுறை நாளை வேண்டாம் என்று பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார்.
இதையும் படிங்க : பருந்து மாதிரி இந்த மாற்றத்தை செஞ்சு சதமடிச்ச கோலி.. இன்னும் 3 – 4 வருஷம் ஆடலாம்.. சஞ்சய் பங்கர் பேட்டி
ஏற்கனவே உலகின் நம்பர் 1 ஒருநாள் போட்டிக்கான பேட்ஸ்மேனாக ஆகவும், இந்திய அணியின் துணைக்கேப்டனாகவும் இருக்கும் அவர் ஓய்வு கூட எடுத்துக் கொள்ளாமல் இப்படி தொடர்ச்சியாக பயிற்சி செய்து வரும் அர்ப்பணிப்பு அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்க.



