டெத் ஓவரில் வெளுத்த டெயில் எண்டர்கள்.. இந்தியாவுக்கு எதிராக சாதனை ஸ்கோர் அடித்த ஆப்கானிஸ்தான்

Gulbadin Naib
- Advertisement -

இந்தியாவுக்கு எதிராக அதனுடைய சொந்த மண்ணில் நடைபெறும் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான் தோல்வியை சந்தித்தது. அந்த நிலையில் இத்தொடரின் முக்கியமான 2வது போட்டி ஜனவரி 14ஆம் தேதி இரவு 7 மணிக்கு இந்தூரில் நடைபெற்றது. அதில் வெற்றிப் பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இந்திய அணியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி 14 மாதங்கள் கழித்து டி20 கிரிக்கெட்டில் களமிறங்கினார். அதே போல ஜெய்ஸ்வால் அணிக்குள் வந்ததால் திலக் வர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் நீக்கப்பட்டார்கள். அதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தானுக்கு அதிரடியாக விளையாட முயற்சித்த ரஹ்மனுல்லா குர்பாஸ் 14 (9) ரவி பிஸ்னோய் சுழலில் ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அசத்திய ஆப்கானிஸ்தான்:
அவரைத் தொடர்ந்து வந்த குல்பதீன் நைப் அதிரடியாக விளையாடிய போதிலும் எதிர்ப்புறம் தடுமாறிய கேப்டன் இப்ராஹீம் ஜாட்ரான் 8 (10) ரன்களில் அக்சர் படேல் சிக்கினார். அதைத் தொடர்ந்து வந்த ஓமர்சாய் 2 ரன்களில் சிவம் துபே வேகத்தில் கிளீன் போல்டானர். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அதிரடியாக விளையாடிய குல்பதின் நைப் இந்திய அணிக்கு சவாலை கொடுத்து அரை சதம் கடந்த போது 5 பவுண்டரி 4 சிக்சருடன் 57 (35) ரன்களில் அக்சர் படேல் சுழலில் அவுட்டானார்.

அந்த நிலைமையில் மறுபுறம் களமிறங்கியிருந்த நட்சத்திர வீரர் முகமது நபியும் இந்தியாவின் துல்லியமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் தடுமாற்றமான பேட்டிங்கை வெளிப்படுத்தி 14 (18) ரன்களில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து நஜிபுல்லா ஜாட்ரானும் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்தி 23 (21) ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்ததால் ஆப்கானிஸ்தான் 150 ரன்கள் தாண்டாது என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் கடைசி நேரத்தில் களமிறங்கிய கரீம் ஜானத் அதிரடியாக 2 பவுண்டரி 1 சிக்சருடன் முக்கியமான 20 (10) ரன்கள் எடுத்து அவுட்டானார். அவருடன் மறுபுறம் அதிரடி காட்டிய முஜீப் உர் ரகுமான் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 21 (9) ரன்கள் விளாசி சூப்பர் ஃபினிஷிங் கொடுத்ததால் 20 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் 172 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதையும் படிங்க: முதல் 2 டெஸ்ட் போட்டியில் தான் அவரு ஆடமாட்டாரு.. ஆனா மீதி 3 டெஸ்ட் ஆட வாய்ப்பிருக்கு – விவரம் இதோ

அதன் வாயிலாக டி20 கிரிக்கெட்டில் இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தங்களுடைய அதிகபட்ச ஸ்கோரை பதிவு செய்து சாதனை படைத்தது. இதற்கு முன் கடந்த போட்டியில் 158/5 ரன்கள் எடுத்ததே முந்தைய அதிகபட்ச ஸ்கோராகும். மறுபுறம் கடைசி 3 ஓவரில் 38 ரன்கள் கொடுத்து டெத் ஓவர்களில் தடுமாற்றமாக செயல்பட்ட இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷிதீப் சிங் 3, அக்சர் படேல் 2, ரவி பிஸ்னோய் 2 விக்கெட்களை சாய்த்தனர்.

Advertisement