முதல் 2 டெஸ்ட் போட்டியில் தான் அவரு ஆடமாட்டாரு.. ஆனா மீதி 3 டெஸ்ட் ஆட வாய்ப்பிருக்கு – விவரம் இதோ

Shami
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜனவரி 25-ஆம் தேதி இந்தியாவில் துவங்க இருக்கிறது. இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பி.சி.சி.ஐ-யின் மூலம் கடந்த நவம்பர் 12-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா தலைமையில் 16 பேர் கொண்ட வீரர்களின் முழுப்பட்டியலும் வெளியாகி ரசிகர்களின் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது. இந்த டெஸ்ட் தொடருக்கான அணியில் சில வீரர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டும், சில வீரர்கள் காயம் காரணமாகவும் வெளியேறியிருந்தனர்.

- Advertisement -

அந்த வகையில் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி அண்மையில் நடைபெற்று முடிந்த 50 ஓவர் உலகக்கோப்பை தொடரில் ஏற்பட்ட காயம் காரணமாக அடுத்து வந்த சில தொடர்களில் இடம் பெறாமல் இருந்து வந்த வேளையில் இந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் முகமது ஷமி கணுக்கால் பகுதியில் அடைந்த காயத்திலிருந்து இன்னும் முழுவதுமாக குணமடைந்து முழு உடற்தகுதியை எட்டாதால் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் இடம்பெறவில்லை என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

- Advertisement -

மேலும் எஞ்சியுள்ள கடைசி மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கு முன்னர் அவரது பிட்னஸ் விளையாடும் அளவிற்கு முன்னேறிவிட்டால் நிச்சயம் எஞ்சிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் இடம் பிடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் அவரது பிட்னஸின் அடிப்படையில் தான் முதல் இரண்டு போட்டிகளில் அவரை தேர்வு செய்யவில்லை என்றும் கட்டாயம் அவர் முழு உடற்தகுதியை எட்டும் பட்சத்தில் கடைசி மூன்று போட்டிகளுக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : இது தான் உண்மையான கிங் கோலிக்கும்.. பாகிஸ்தான் கிங் பாபருக்கும் உள்ள வித்யாசம்.. ரசிகர்கள் அதிருப்தி

இதன் காரணமாக முகமது ஷமியின் மருத்துவ அறிக்கையை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சமீப காலமாகவே மிகச் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் முகமது ஷமி இந்திய அணியில் தொடர்ந்து இருக்க வேண்டிய ஒரு வீரர் என்று பலரும் தங்களது ஆதரவுகளை அவருக்கு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement