இது தான் உண்மையான கிங் கோலிக்கும்.. பாகிஸ்தான் கிங் பாபருக்கும் உள்ள வித்யாசம்.. ரசிகர்கள் அதிருப்தி

Virat vs Babar Azam
- Advertisement -

ஐசிசி உலகக் கோப்பை 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கு தயாராவதற்காக நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் மோதி வருகின்றன. தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெறும் இத்தொடரின் முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து ஜனவரி 14ஆம் தேதி ஹமில்டன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியிலும் பாகிஸ்தானை 21 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு 194/8 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஃபின் ஆலன் 74 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹாரிஸ் ரவூப் 3 விக்கெட்டுகள் எடுத்தார். அதைத் தொடர்ந்து 195 ரன்களை துரத்திய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 1, முகமது ரிஸ்வான் 7 ரன்களில் அவுட்டாகி பின்னடவை கொடுத்தனர்.

- Advertisement -

பாகிஸ்தானின் கிங்:
அதனால் 10/2 என்ற சுமாரான துவக்கத்தை பெற்ற பாகிஸ்தானுக்கு அடுத்ததாக பகார் ஜமான் மற்றும் பாபர் அசாம் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதில் பஃகார் ஜமான் வழக்கம் போல அதிரடியாக விளையாடி 200 ஸ்ட்ரைக் ரேட்டில் 50 (25) ரன்கள் குவித்து அவுட்டானார். ஆனால் அடுத்ததாக வந்த இப்திகார் அகமது 4, அசாம் கான் 2, அமீர் ஜமால் 9 ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார்கள்.

ஆனாலும் மறுபுறம் தமக்கே உரித்தான ஸ்டைலில் நங்கூரமாக விளையாடிய பாபர் அசாம் 7 பவுண்டரி 2 சிக்சருடன் 66 (43) ரன்கள் குவித்து நன்கு செட்டிலானதால் கண்டிப்பாக வெற்றி பெற வைப்பார் என்று பாகிஸ்தான் ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர். இருப்பினும் அப்போது கடைசி 18 பந்துகளில் பாகிஸ்தானுக்கு 42 ரன்கள் தேவைப்பட்ட போது அவுட்டான அவர் ரசிகர்களுக்கும் பாகிஸ்தானுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தார்.

- Advertisement -

ஏனெனில் அடுத்து வந்த வீரர்களும் ஏமாற்றத்தை கொடுத்ததால் 19.3 ஓவரில் 173 ரன்களுக்கு பாகிஸ்தானை ஆல் அவுட்டாக்கி வென்ற நியூசிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆடம் மில்னே 4 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக கடந்த 2022 டி20 உலகக் கோப்பையில் இதை விட அழுத்தமான போட்டியில் 18 பந்துகளில் 48 ரன்கள் தேவைப்பட்ட போது கில்லியாக நின்ற விராட் கோலி பாகிஸ்தானை தோற்கடித்து அபார ஃபினிஷிங் கொடுத்து இந்தியாவுக்கு மறக்க முடியாத வெற்றியை பரிசளித்தார்.

இதையும் படிங்க: 12இல் 10 ஏமாற்றம்.. 2023 உ.கோ தோல்வியிலிருந்து இன்னும் மீள முடியாமல் தள்ளாடும் பாகிஸ்தான்

ஆனால் கிட்டதட்ட அதே போன்ற இக்கட்டான சூழ்நிலை இப்போட்டியில் நிலவிய போது பாகிஸ்தானுக்கு பாபர் அசாம் ஏமாற்றத்தையே கொடுத்தார். அதனால் இது தான் உண்மையான கிங் கோலிக்கும் உங்களுடைய கிங் பாபர் அசாமுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்று பாகிஸ்தான் ரசிகர்களுக்கு இந்திய ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். மறுபுறம் 2023 ஆசிய மற்றும் உலகக்கோப்பை உட்பட சமீப காலங்களாகவே சொதப்பி வரும் பாபர் அசாம் இப்போட்டியிலும் கைவிட்டதால் பாகிஸ்தான் ரசிகர்களே தங்களுடைய கிங் மீது அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Advertisement