12இல் 10 ஏமாற்றம்.. 2023 உ.கோ தோல்வியிலிருந்து இன்னும் மீள முடியாமல் தள்ளாடும் பாகிஸ்தான்

Pakistan Team
- Advertisement -

பாகிஸ்தானுக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து விளையாடி வருகிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராக நடைபெறும் இந்த தொடரில் முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றது. அந்த நிலைமையில் ஜனவரி 14ஆம் தேதி ஹமில்டன் நகரில் நடைபெற்ற 2வது போட்டியிலும் பாகிஸ்தானை 21 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து தோற்கடித்தது.

அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவர்களில் சிறப்பாக செயல்பட்டு 194/8 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஃபின் ஆலன் 74 (41) ரன்கள் எடுத்த நிலையில் பாகிஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் ரவூப் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதைத்தொடர்ந்து களமிறங்கிய பாகிஸ்தானுக்கு சாய்ம் ஆயுப் 1, முகமது ரிஸ்வான் 7 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர்.

- Advertisement -

தள்ளாடும் பாகிஸ்தான்:
அதனால் மிடில் ஆர்டரில் அனுபவ வீரர்கள் பாபர் அசாம் 66 (43) பக்கார் ஜமான் அதிரடியாக 50 (25) ரன்கள் எடுத்து போராடினார்கள். ஆனாலும் அவர்களை தொடர்ந்து இப்திகார் அகமது 4, அசாம் கான் அமீர் ஜமால் 9 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார். அதனால் 19.3 ஓவரில் பாகிஸ்தானை 173 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்கிய நியூசிலாந்து அசத்தலான வெற்றி பெற்றது.

அதனால் 2 – 0* என்ற கணக்கில் ஆரம்பத்திலேயே முன்னிலை பெற்றுள்ள நியூஸிலாந்து சார்பில் அதிகபட்சமாக ஆடம் மில்னே 4 விக்கெட்டுகள் எடுத்தார். முன்னதாக 2023 உலகக் கோப்பையில் வரலாற்றில் தொடர்ந்து 8வது முறையாக இந்தியாவிடம் தோல்வியை சந்தித்த பாகிஸ்தான் கத்துக்குட்டியான ஆப்கானிஸ்தானிடமும் முதல் முறையாக அவமான தோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று பாபர் அசாம் கேப்டன்ஷிப் பதவியை ராஜினாமா செய்ததார்.

- Advertisement -

அதன் பின் ஷான் மசூட் டெஸ்ட், ஷாஹீன் அப்ரிடி டி20 அணிகளின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டனர். ஆனால் ஷான் மசூட் தலைமையில் நிறைவு பெற்ற டெஸ்ட் தொடரில் எந்த முன்னேற்றத்தையும் சந்திக்காத பாகிஸ்தான் வரலாற்றில் தொடர்ந்து 28வது வருடமாக ஆஸ்திரேலிய மண்ணில் வெற்றி காண முடியாமல் 3 – 0 என்ற கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. அதை தொடர்ந்து சாகின் அப்ரிடி தலைமையில் இந்த டி20 தொடரில் விளையாடும் பாகிஸ்தான் முதலிரண்டு போட்டிகளில் ஆரம்பத்திலேயே தோற்று பின்தங்கியுள்ளது.

இதையும் படிங்க: இரண்டாவது டி20 போட்டியில் எதிர்பார்த்தது போலவே 2 மாற்றங்களை செய்த ரோஹித் – பிளேயிங் லெவனில் ஏற்பட்டுள்ள மாற்றம்

அந்த வகையில் கடைசியாக விளையாடிய 12 சர்வதேச போட்டிகளில் வெறும் 2 வெற்றியை மட்டுமே சந்தித்த பாகிஸ்தான் 10 ஏமாற்ற தோல்விகளை பதிவு செய்துள்ளது. அந்த 2 வெற்றிகளில் ஒன்று 2023 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக பெற்றதாகும். அந்த வகையில் 2023 உலகக் கோப்பை தொடரில் சந்தித்த தோல்வியிலிருந்து இன்னும் மீளாத பாகிஸ்தான் 2024 புத்தாண்டில் ஒரு வெற்றியை கூட பதிவு செய்யாமல் தள்ளாடி வருகிறது.

Advertisement