இரண்டாவது டி20 போட்டியில் எதிர்பார்த்தது போலவே 2 மாற்றங்களை செய்த ரோஹித் – பிளேயிங் லெவனில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Rohit
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே இந்த தொடரில் நடைபெற்று முடிந்த முதல் டி20 போட்டியில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்திய இந்திய அணியானது ஆறு விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்த தொடரில் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டியானது இன்று ஜனவரி 14-ஆம் தேதி இந்தூர் நகரில் துவங்கியது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியானது முதலில் பந்துவீச்சை தீர்மானம் செய்தது. அதனைத்தொடர்ந்து தற்போது ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

இந்நிலையில் இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் நிச்சயம் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் துவக்க வீரர் சுப்மன் கில் நீக்கப்பட்டு முதல் போட்டியில் விளையாடாத யாஷஸ்வி ஜெய்ஸ்வாலும், முதல் போட்டியில் பங்கேற்காத விராத் கோலி இரண்டாவது போட்டியில் திலக் வர்மாவிற்கு பதிலாகவும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இப்படி அனைவரும் எதிர்பார்த்தது போலவே இந்த சரியான இரண்டு மாற்றங்களை ரோகித் சர்மா இந்த இரண்டாவது டி20 போட்டிக்கான அணியில் செய்துள்ளார். அந்த வகையில் இன்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பிறகு பேசிய ரோகித் சர்மா கூறுகையில் : நாங்கள் இந்த போட்டியில் முதலில் பந்துவீச விரும்புகிறோம். அதற்கு எந்த காரணமும் இல்லை மைதானம் அளவில் சிறியது என்பதால் முதலில் அவர்களை பேட்டிங் செய்யவிட்டு பின்னர் நாங்கள் சேசிங் செய்யலாம் என்று நினைக்கிறோம்.

- Advertisement -

மேலும் இந்த போட்டியில் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் விராட் கோலி ஆகியோர் சுப்மன் கில் மற்றும் திலக் வர்மா அகியோருக்கு பதிலாக இன்றைய போட்டியில் விளையாடுகிறார்கள் என்று அறிவித்தார். அந்த வகையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : இந்திய அணியில் சான்ஸ் கிடைப்பதே கஷ்டம்.. அவரை கழற்றி விட்டது கரெக்ட் தான்.. கம்ரான் அக்மல்

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) விராட் கோலி, 4) ஷிவம் துபே, 5) ஜிதேஷ் சர்மா, 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) வாஷிங்க்டன் சுந்தர், 9) ரவி பிஷ்னாய், 10) அர்ஷ்தீப் சிங், 11) முகேஷ் குமார்.

Advertisement