இந்திய அணியில் சான்ஸ் கிடைப்பதே கஷ்டம்.. அவரை கழற்றி விட்டது கரெக்ட் தான்.. கம்ரான் அக்மல்

Kamran Akmal
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் ஜனவரி 25ஆம் தேதி துவங்க உள்ளது. அதில் முதலிரண்டு போட்டிகளில் விளையாடுவதற்கான இந்திய அணியை பிசிசிஐ சமீபத்தில் அறிவித்தது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் அறிவிக்கப்பட்ட அந்த அணியில் விராட் கோலி, ஜெய்ஸ்வால், கில், ராகுல் போன்ற இளமையும் அனுபவம் கலந்த வீரர்கள் நிறைந்துள்ளனர்.

இருப்பினும் அந்த அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இசான் கிசான் நீக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதாவது கடந்த டிசம்பர் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் சொந்த காரணங்களுக்காக இஷான் கிசான் வெளியேறினார். குறிப்பாக கடந்த ஒரு வருடமாக இந்திய அணியுடன் பயணித்ததால் ஏற்பட்ட பணிச்சுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர் குடும்பத்தை பார்க்க அனுமதி கொடுக்குமாறு பிசிசிஐயிடம் கேட்டார்.

- Advertisement -

சரியான முடிவு:
அதில் நியாயமும் இருந்ததால் பிசிசிஐ உடனடியாக விடுப்பு கொடுத்தது. ஆனால் அந்த இடைவெளியில் குடும்பத்துடன் இருக்காத இஷான் கிசான் துபாய்க்கு சென்று 2024 புத்தாண்டு பார்ட்டியில் ஈடுபட்டார். அதனால் அதிருப்தியடைந்த பிசிசிஐ நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் அவரை அதிரடியாக நீக்கியது. அத்துடன் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவரை கழற்றி விட்டு இளம் வீரர் துருவ் ஜுரேலுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.

அதற்கு இடைவெளியில் பார்ட்டிக்கு செல்லக் கூடாது என்று சட்டம் இருக்கிறதா என ரசிகர்கள் எதிர்ப்பு நிலையில் நன்னடத்தை காரணமாக இசான் கிசான் நீக்கப்படவில்லை என்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மறுப்பு தெரிவித்தார். இந்நிலையில் இந்த இளம் வயதிலேயே இஷான் கிசான் பணிச்சுமையால் பாதிக்கப்பட்டதாக சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவிக்கும் முன்னாள் பாகிஸ்தான் வீரர் கம்ரான் அக்மல் பிசிசிஐ எடுத்துள்ள முடிவு சரியானது என கூறியுள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பணிச்சுமையால் தென்னாப்பிரிக்க டெஸ்ட் தொடரில் இஸான் கிசான் விலகியது சில விமர்சனங்களை எழுப்பியது. ஆனால் உங்களுடைய கேரியரின் ஆரம்பத்திலேயே நீங்கள் எப்படி மனதளவில் பாதிக்க முடியும்? இதே அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, பும்ரா ஆகியோர் ஐபிஎல் மற்றும் சர்வதேச போட்டிகளில் நீண்ட காலமாக விளையாடி தங்களுடைய பணிச்சுமையை நிர்வகிக்கின்றனர்”

இதையும் படிங்க: இந்திய அணியில் சான்ஸ் கிடைப்பதே கஷ்டம்.. அவரை கழற்றி விட்டது கரெக்ட் தான்.. கம்ரான் அக்மல்

“இருப்பினும் அவர்கள் இது போன்ற காரணத்தை சொல்லி நான் கேட்டதில்லை. இந்திய அணிக்காக விளையாடுவது மிகப்பெரிய விஷயமாகும். ஆனால் அந்த வாய்ப்பை நீங்கள் இப்படி தட்டிக் கழிப்பது என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. எனவே இஷான் கிசானை தேர்வு செய்யாமல் பிசிசிஐ சரியான வேலை செய்துள்ளது என்றே நினைக்கிறேன். இந்த முடிவு பணிச்சுமையை காரணமாக சொல்லும் வீரர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கும். ஏனெனில் நாட்டுக்காக நீங்கள் விளையாடும் போது ஓய்வு கேட்க முடியாது” என்று கூறினார்.

Advertisement