இப்படியா மத்தவங்கள ரிஸ்க்கில் தள்ளுவீங்க.. பாபர் அசாமை நேரலையில் விமர்சித்த.. ஆடம் கில்கிறிஸ்ட்

Adam Gilchrist
- Advertisement -

ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் 2025/26 பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகின்றது. அந்தத் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்காக நட்சத்திர வீரர் பாபர் அசாம் முதல் முறையாக விளையாடுகிறார். அந்த வாய்ப்பில் முதல் 2 போட்டிகளில் அவர் முறையே 2 (5), 9 (10) ரன்களில் அவுட்டாகி தம்முடைய அணிக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தார்.

இருப்பினும் 3வது போட்டியில் நிதானமாக விளையாடிய அவர் 58 (42) ரன்கள் அடித்து ஓரளவு அசத்தினார். அதனால் தொடர்ச்சியாக அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்ட பாபர் அசாம் 4வது போட்டியில் மீண்டும் தடவலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 2 (7) ரன்னில் அவுட்டானார். அதன் காரணமாக எதிரணி ரசிகர்கள் அவரை சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்தார்கள்.

- Advertisement -

தடவலான பாபர்:

அந்த சூழ்நிலையில் சிட்னி அணி இன்று தங்களது 5வது போட்டியில் மெல்போர்னை எதிர்கொண்டது. அந்தப் போட்டியில் முதலில் விளையாடிய மெல்போர்ன் 165 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. அதைத் துரத்திய சிட்னி அணிக்கு பாபர் அசாம் மீண்டும் நங்கூரமாக விளையாடுகிறேன் என்ற பெயரில் தடவலாக பேட்டிங் செய்து ரசிகர்களைக் கடுப்பேற்றினார்.

அதனால் எதிர்புறம் ரிஸ்க் எடுத்து விளையாடிய டேனியல் ஹுக்ஸ் 30 (23) ரன்களில் அவுட்டானார். அடுத்து வந்த ஜோஸ் ஃபிலிப் 16 (12), கேப்டன் ஹென்றிக்ஸ் 23 (18) ரன்கள் அடித்து அவுட்டானார்கள். மறுபுறம் தொடர்ந்து தடவலாக விளையாடிய பாபர் அசாம் 26 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து நன்கு செட்டிலாகியும் அதிரடியை துவக்கவில்லை.

- Advertisement -

கில்கிறிஸ்ட் விமர்சனம்:

அதைப் பார்த்த ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் “இப்படியா மெதுவாக விளையாடி எதிர்புறம் வரும் பார்ட்னர் பேட்ஸ்மேன்களை ஆபத்தில் தள்ளுவீர்கள்?” என்ற வகையில் அவரை நேரலையில் விமர்சித்தார். இது பற்றி கில்கிறிஸ்ட் பேசியது பின்வருமாறு. “பாபர் அசாம் அதிரடியாக விளையாடக் கூடியவர் கிடையாது”

“அவர் லைன்க்கு குறுக்கே சென்று அதிரடியாக பவுண்டரி அல்லது சிக்ஸர் அடிக்கக் கூடியவரும் கிடையாது. இருப்பினும் அவர் செயலூக்கத்துடன் விளையாட வேண்டும். அதை விட்டுவிட்டு பந்துக்கு நிகரான ரன்கள் மட்டும் எடுத்து, வெற்றி பெறுவதற்கான பொறுப்பை அவர் தன்னுடைய பேட்டிங் பார்ட்னர் மேலே போடலாம் என்று நினைக்கக்கூடாது” என விமர்சித்தார்.

இதையும் படிங்க: தோனியும் இல்ல.. விராட், ரோஹித்தும் போய்ட்டா.. அழியும் ஒன்டேவை காப்பற்ற ஐசிசி இதை செய்யனும்.. அஸ்வின் பேட்டி

அந்த விமர்சனத்திற்கு மத்தியில் கடைசி வரை அவுட்டாகாமல் அரை சதமடித்த அவர் 58* (46) ரன்களை 126.09 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தார். ஆனால் எதிர்ப்புறம் வந்த ஜோயல் டேவிஸ் மிரட்டலாக 34* (15) ரன்கள் குவித்து ஃபினிஷிங் செய்தார். அதனால் 19.1 ஓவரில் 168/4 ரன்களை எடுத்த சிட்னி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Advertisement