நூற்றாண்டுக்கு முன்பு துவக்கப்பட்ட கிரிக்கெட்டில் ஒருநாள் போட்டிகளின் வருகையால் டெஸ்ட் போட்டிகளுக்கான மவுசு குறைந்தன. இருப்பினும் 2019இல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை அறிமுகப்படுத்திய அதை வெற்றிகரமாக தூக்கி நிறுத்தியுள்ளது. ஆனால் அதற்கிடையே வந்த டி20 போட்டிகளின் வருகையால் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டின் மேலிருந்த ஆர்வமும் மௌசும் குறைந்து வருகிறது என்று சொல்லலாம்.
இந்நிலையில் தோனி போன்ற வீரர்கள் இல்லாதது ஒருநாள் கிரிக்கெட்டில் அலுப்பை உண்டாக்குவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார். அதை சரிசெய்ய சாம்பியனை தீர்மானிப்பதற்காக 4 வருடத்திற்கு ஒருமுறை மட்டும் ஒருநாள் உலகக்கோப்பை நடத்த வேண்டுமென்று அவர் கூறியுள்ளார். மற்ற சமயங்களில் தற்போதைய நிலைமையை ஆக்கிரமித்துள்ள டி20 தொடர்கள் நடைபெறுவதே சிறந்தது என்றும் அவர் கூறியுள்ளார்.
விராட், ரோஹித் போய்டுவாங்க:
இது பற்றி அஸ்வின் கொடுத்துள்ள விரிவான விளக்கம் பின்வருமாறு. “2027க்குப்பின் ஒருநாள் உலகக் கோப்பையின் வருங்காலம் பற்றி எனக்கு கவலை ஏற்பட்டுள்ளது. விஜய் ஹசாரே உள்ளூர் ஒருநாள் கோப்பையை நான் பின்பற்றுகிறேன். ஆனால் சயீத் முஸ்டாக் அலி டி20 கோப்பை அளவுக்கு அதைப் பின்பற்றுவது எனக்கு கடினமாக இருக்கிறது. அத்துடன் ரசிகர்கள் எதைப் பார்க்க விரும்புகிறார்கள் என்பதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்”
“டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு எப்போதும் இடைவெளி இருக்கும் என்று நான் கருதுகிறேன். ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு இடைவெளி இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. விராட், ரோஹித் மீண்டும் விளையாடியதால் மக்கள் விஜய் ஹசாரே கோப்பையை பார்க்கத் துவங்கினர். இந்த விளையாட்டை விட யாரும் என்று பெரிது கிடையாது என்பது நமக்குத் தெரியும். ஆனாலும் இந்த விளையாட்டை ரசிகர்களிடம் தொடர்புபடுத்த விராட், ரோஹித் போன்றவர்கள் கம்பேக் கொடுக்க வேண்டியுள்ளது”
அஸ்வின் கருத்து:
“இருப்பினும் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அவர்களும் ஓய்வு பெற்று விட்டால் என்ன நடக்கும்? ஒரு காலத்தில் ஒருநாள் போட்டிகள் அற்புதமானதாக இருந்தது. ஏனெனில் தோனி போன்ற வீரர் அடித்து நொறுக்குவதற்கு முன் 10 – 15 ஓவர்கள் சிங்கிள்கள் எடுத்து நிதானமாக விளையாடுவார். ஆனால் இனிமேலும் தோனியை போன்ற வீரர்கள் உங்களிடம் இல்லை. சொல்லப்போனால் இப்போது 2 பந்துகள், வட்டத்திற்குள் 5 ஃபீல்டர்கள் என்ற விதிமுறையால் நீங்கள் அப்படி விளையாட வேண்டிய அவசியமும் கிடையாது”
இதையும் படிங்க: டி20 வேர்ல்டுகப்புக்கு முன்னாடி சூரியகுமார் யாதவ் இதை கன்பார்ம் பண்ணி ஆகனும் – சீக்கா கருத்து
“அதனால் ஒருநாள் போட்டிகள் தேவையற்றதாகிறது. கூடவே ஐசிசி ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு தொடரை நடத்துகிறது. கால்பந்தில் உலகக் கோப்பை 4 வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். ஆனால் பிரீமியர் லீக் தொடர்கள் நடந்து கொண்டே இருக்கும். அது போல தொடர்ந்து டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடுங்கள். ஒருநாள் உலகக் கோப்பையில் 4 வருடத்திற்கு ஒருமுறை விளையாடுங்கள். அவ்வாறு செய்தால் எதிர்பார்ப்பு இருக்கும்” என்று கூறினார்.



