இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கும் 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் பிப்ரவரி 7-ஆம் தேதி முதல் மார்ச் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட இருக்கும் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கான அட்டவணை ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் இந்த டி20 உலக கோப்பை தொடரினை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லப்போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.
சூரியகுமார் யாதவுக்கு அட்வைஸ் கொடுத்துள்ள : சீக்கா ஸ்ரீகாந்த்
ஏற்கனவே 2024 டி20 உலக கோப்பை தொடரினை வெற்றி பெற்ற இந்திய அணியானது இம்முறை நடப்பு சாம்பியனாக இந்த உலக கோப்பை தொடரில் பங்கேற்கும் நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடரையும் வென்று சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க வேண்டும் என்று பலரும் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
அதேபோன்று இம்முறை சொந்த மண்ணில் இந்திய அணி விளையாட இருப்பதால் இந்திய அணியே சாம்பியன் பட்டத்தை வெல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் பலரும் தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் எந்த இடத்தில் விளையாடப் போகிறார் என்பதை உறுதி செய்துவிட்டு அதே இடத்தில் தொடர்ந்து விளையாட வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் கூறுகையில் : தற்போதைக்கு இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் சூரியகுமார் யாதவ் மியூசிக்கல் சேர் விளையாடிக் கொண்டிருக்கிறார். ஏனென்றால் ஒவ்வொரு போட்டியிலும் அவர் ஒவ்வொரு இடத்தில் களமிறங்கி விளையாடி வருகிறார். ஆனால் உலகக்கோப்பை தொடரின் போது அப்படி இருக்கக்கூடாது.
அவர் தன்னுடைய கேமில் இன்னும் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். ஒருமுறை அவர் ஒரு பேட்டிங் ஆர்டரில் விளையாட ஆரம்பித்துவிட்டால் அந்த பேட்டிங் பொசிஷனை மாற்றக்கூடாது. மூன்றாம் இடத்தில் ஓகே என்றால் அந்த இடத்தில் தொடர்ந்து விளையாடலாம். மற்றபடி அடிக்கடி அவர் இடமாற்றம் செய்யக்கூடாது.
இதையும் படிங்க : இன்னும் 87 ரன்கள் போதும்.. 5 ஆவது இந்திய வீரராக ரோஹித் சர்மா படைக்கப்போகும் சாதனை – விவரம் இதோ
டி20 உலக கோப்பை தொடரானது நெருங்கும் வேளையில் இப்படி அவரது பேட்டிங் பொசிஷனில் அடிக்கடி மாற்றம் நடைபெற்றால் அவரது பார்ம் இன்னும் மோசமாகிவிடும். எனவே குறிப்பிட்ட இடத்தில் தொடர்ந்து விளையாட வேண்டும் என்று தான் நினைப்பதாக கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.



