5 ஆவது இந்திய வீரராக ரோஹித் சர்மா நிகழ்த்தப்போகும் சாதனை :
இதன் காரணமாக அடுத்த உலக கோப்பையை கணக்கில் கொண்டு ஒருநாள் போட்டிகளில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரிலும் சரி, தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரும் சரி அற்புதமான அதிரடியான ஆட்டத்தை ரோகித் சர்மா வெளிப்படுத்தியிருந்தார்.
இதனால் நிச்சயம் அவர் 2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்ற ஆதரவும் குவிந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கும் வேளையில் இந்த ஒருநாள் தொடரிலும் ரோகித் சர்மா இடம்பெறுவார் என்று தெரிகிறது.
அப்படி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இடம் பெற்று விளையாடும் பட்சத்தில் மேலும் 87 ரன்களை அவர் அடிக்கும் பட்சத்தில் ஐந்தாவது இந்திய வீரராக மாபெரும் சாதனை ஒன்றினை நிகழ்த்த காத்திருக்கிறார். அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் :
ரோகித் சர்மா இதுவரை 352 லிஸ்ட் ஏ கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 13913 ரன்களை குவித்துள்ளார். இன்னும் அவர் 87 ரன்களை அடிக்கும் பட்சத்தில் லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் 14,000 ரன்களை பூர்த்தி செய்த ஐந்தாவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்துவார்.
இதையும் படிங்க : டி20 உலககோப்பை தொடரின் அரையிறுதிக்கு செல்லும் 4 அணிகள் இதுதான் – ஹர்பஜன் சிங் கணிப்பு
இவருக்கு முன்னதாக ஏற்கனவே சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்தியிருக்கும் வேளையில் ஐந்தாவது இந்திய வீரராக இந்த சாதனையை ரோஹித் சர்மா நிகழ்த்த காத்திருக்கிறார். சர்வதேச ஒருநாள் போட்டிகளை பொறுத்தவரை ரோகித் சர்மா இதுவரை 279 போட்டிகளில் விளையாடி 3 இரட்டை சதம் உட்பட 33 சதம் மற்றும் 61 அரைசதம் என 11,156 ரன்களை குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.



