சும்மா பொய் சொல்லாதீங்க.. சச்சின் சாதனையை வைத்து மட்டமான வேலையை செய்த விராட் கோலி ரசிகர்கள்.. அம்பலமாக்கிய கில்கிறிஸ்ட்

Adam Gilchrist 2
- Advertisement -

ஆசிய கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் நடைபெறும் 2023 ஐசிசி உலகக்கோப்பைக்கு தயாராகும் வகையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. இருப்பினும் அதில் முதலிரண்டு போட்டிகளில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற சில முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டு கேஎல் ராகுல் கேப்டனாக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே போல ஆஃப் ஸ்பின்னர் தேவை என்பதற்காக தமிழக வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் நட்சத்திர சீனியர் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டது ரசிகர்களுக்கு ஆச்சரியமாகவும் அமைந்தது. இருப்பினும் இந்த அணியில் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி தேர்வு செய்யப்படாதது அவருடைய ரசிகர்களுடைய பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனெனில் ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக சதமடித்த அவர் தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார்.

- Advertisement -

மட்டமான வேலை:
குறிப்பாக 34 வயதிலேயே இதுவரை 47 சதங்கள் அடித்துள்ள அவர் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சச்சின் டெண்டுல்கரின் (49 சதங்கள்) உலக சாதனையை முறியடிப்பதற்கு இன்னும் 3 சதங்கள் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே வகையில் தற்போது நல்ல ஃபார்மில் இருப்பதால் சச்சினின் 100 சதங்கள் சாதனைக்கு முன்பாக இந்த 49 சதங்கள் சாதனையை விராட் கோலி எளிதாக முறியடிப்பதற்கான வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளது.

ஆனாலும் சச்சின் டெண்டுல்கரின் அந்த ஆல் டைம் சாதனையை முறியடிப்பதை தடுப்பதற்காக அல்லது தள்ளிப் போடுவதற்காக பிசிசிஐ மற்றும் இந்திய அணி நிர்வாகம் முயற்சிப்பதாக விராட் கோலி ரசிகர்கள் விமர்சனத்தை வெளிப்படுத்துகின்றனர். அதாவது மும்பையை சேர்ந்த சச்சினின் சாதனையை பாதுகாக்க மும்பையை சேர்ந்த அஜித் அகர்கர் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரின் சில போட்டிகளிலும் ஆசிய கோப்பையில் சில போட்டிகளிலும் வேண்டுமென்றே ஓய்வு கொடுத்ததாக விராட் கோலி ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.

- Advertisement -

அதற்கேற்ற போல் 2011 – 2020 வரை 10 வருடங்களில் 20 போட்டிகளில் மட்டுமே விளையாடாத விராட் கோலி 2020க்குப்பின் தற்போது வரை 3 வருடத்திற்குள் 21* ஒருநாள் போட்டிகளில் விளையாடவில்லை. அந்த நிலையில் சச்சின் டெண்டுல்கரின் சாதனை உடைக்கப்படக்கூடாது என்பதற்காக விராட் கோலிக்கு வேண்டுமென்றே ஓய்வு கொடுப்பதாக ஆஸ்திரேலிய ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் கூறியதாக அவருடைய ரசிகர்கள் சமூக வலைதளங்களில் செய்திகளை பரப்பினார்கள்.

இதையும் படிங்க: ரஜினிகாந்த் இருக்கட்டும்.. முதலில் அந்த 2 முன்னாள் இந்திய வீரர்களுக்கு 2023 உ.கோ தங்க டிக்கெட் கொடுங்க – பிசிசிஐக்கு கவாஸ்கர் கோரிக்கை

அது உடனடியாக ட்ரெண்டிங் ஆனதையும் கவனித்த கில்கிறிஸ்ட் “நான் எப்போதுமே இதை சொல்லவில்லை” என்று ட்விட்டரில் பதிவிட்டு விராட் கோலி ரசிகர்கள் செய்த மட்டமான போலியான பிரச்சாரத்தை அம்பலமாக்கியுள்ளார். மொத்தத்தில் பணிச்சமைக்காக கொடுக்கப்பட்ட ஓய்வை விராட் கோலி ரசிகர்கள் தவறாக புரிந்து கொண்டு இப்படி விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement