- Advertisement -
ஆசிய கோப்பை

ஒட்டு மொத்தமாக 4 ஆவது இந்திய வீரராகவும்.. சேஸிங்கில் முதல் இந்திய வீரராகவும் அபிஷேக் சர்மா – நிகழ்த்திய சாதனை

ஐக்கிய அரபு அமீரக அணிக்கு எதிராக நேற்று நடைபெற்ற நடப்பு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில் விளையாடிய இந்திய அணியானது 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை வீழ்த்தி இந்த தொடரினை பிரமாதமாக துவங்கியுள்ளது. நடப்பு சாம்பியனாக இந்த ஆசிய கோப்பை தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்திய அணி நேற்று தங்களது முதலாவது லீக் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரக அணியை எதிர்த்து விளையாடியது. இந்த போட்டியின் போது டாசில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

4 ஆவது இந்திய வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்திய சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் பந்துவீசிய இந்திய அணி ஐக்கிய அரபு அமீரக அணியை வெறும் 13.1 ஓவர்களில் 57 ரன்களிலேயே சுருட்டியது. பின்னர் 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணி அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி 4.3 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் போது இந்திய அணி சார்பாக அசத்தலான பேட்டிங்கை வெளிப்படுத்திய நட்சத்திர துவக்க வீரரான அபிஷேக் சர்மா 16 பந்துகளை சந்தித்து 2 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் என 30 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இந்நிலையில் இந்த போட்டியின் போது அவர் ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு அடுத்து நான்காவது இந்திய வீரராகவும் ஒரு மாபெரும் சாதனையை டி20 போட்டியில் நிகழ்த்தி அசத்தியுள்ளார்.

அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் : இந்த போட்டியின் போது 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கினை இந்திய அணி துரத்தும் போது இந்திய அணியின் துவக்க வீரரான அபிஷேக் சர்மா தான் சந்தித்த முதல் பந்தினை சிக்ஸருக்கு விரட்டி அசத்தியிருந்தார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் முதல் பந்தை சிக்ஸருக்கு அடித்த நான்காவது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

- Advertisement -

இதற்கு முன்னதாக கடந்த 2021-ஆம் ஆண்டு ரோஹித் சர்மா இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆடில் ரஷீத்துக்கு எதிராக முதல் பந்திலேயே சிக்சரை அடித்திருந்தார். அவருக்கு அடுத்து யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் சிக்கந்தர் ராசாவிற்கு எதிராக முதல் பந்தில் சிக்சர் அடித்திருந்தார். அதேபோன்று சஞ்சு சாம்சன் இந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற போட்டியின் போது ஜோப்ரா ஆர்ச்சருக்கு எதிராக முதல் பந்திலேயே சிக்ஸரை விளாசியிருந்தார்.

இதையும் படிங்க : இதனால் தான் இந்தியா நம்பர் 1 அணியாக இருக்கிறது.. தோல்விக்கு பிறகு இந்திய அணி குறித்து பேசிய – யு.ஏ.இ கேப்டன்

இவர்கள் மூவருக்கு அடுத்து நேற்று நான்காவது இந்திய வீரராக அபிஷேக் ஷர்மா இந்த சாதனையை நிகழ்த்தினார். அதுமட்டுமின்றி ரோஹித், ஜெயிஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது முதல் பந்தில் சிக்ஸர் விளாசியிருந்தனர். ஆனால் சேசிங்கின் போது முதல் பந்திலேயே சிக்சர் அடித்த முதல் இந்திய வீரராக அபிஷேக் சர்மா தனித்துவமான இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -