இந்திய அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணியானது இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப் பிடிக்க முடியாமல் படுமாசமான தோல்வியை சந்தித்தது. இந்த ஆசிய கோப்பை தொடரின் ஏ பிரிவில் இடம் பெற்றிருந்த இந்தியா மற்றும் ஐக்கிய அரபு அமீரக அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.
இந்திய அணி உலகின் நம்பர் 1 டீம் : யு.ஏ.இ கேப்டன் பாராட்டு :
இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற இந்திய அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் இந்திய அணியானது முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய ஐக்கிய அரபு அமீரக அணி இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் வெறும் 13.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 57 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதன் காரணமாக 58 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது 4.3 ஓவர்களிலேயே 1 விக்கெட்டை மட்டும் இழந்து 60 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த போட்டி முடிந்து இந்திய அணியிடம் அடைந்த தோல்வி குறித்து ஐக்கிய அரபு அமீரக அணியின் கேப்டன் முகமது வசீம் சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கில் மிகச் சிறப்பாக துவங்கி இருந்தோம். ஆனால் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததே இந்த போட்டியில் நாங்கள் தோற்றதற்கு மிக முக்கியமான காரணமாக மாறியது.
இந்திய அணி ஒரு அபாரமான அணி. அவர்களுடைய பந்துவீச்சு மிகச் சிறப்பாக இருந்தது. எங்களது அணியின் பேட்ஸ்மேன்களுக்கு எதிராக சரியான திட்டங்களை வகுத்து சிறப்பாக செயல்பட்டிருந்தனர். இதன் காரணமாகவே அவர்கள் உலகின் நம்பர் 1 டி20 அணியாக இருக்கிறார்கள்.
இதையும் படிங்க : டார்கெட் 200 ஆ இருந்தாலும் சரி.. 50 ஆ இருந்தாலும் சரி.. இதுதான் அவரோட கேம்.. அபிஷேக் சர்மாவை – பாராட்டிய கேப்டன்
ஒரு அணியாக நாங்கள் இந்த போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் நிச்சயம் எங்களுடைய தவறுகளை திருத்திக் கொண்டு வலுவாக திரும்புவோம் என முகமது வாசிம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான இந்த போட்டிக்கு முன்னர் சவால் விட்ட யு.ஏ.இ கேப்டன் தற்போது தோல்விக்கு பிறகு இந்திய அணியை பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.



