- Advertisement -
இந்திய கிரிக்கெட்

2025 ஆம் ஆண்டிற்கான டாப் வீரராக அபிஷேக் சர்மா நிகழ்த்த இருக்கும் அசத்தல் சாதனை – விவரம் இதோ

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது டிசம்பர் 9-ஆம் தேதியான இன்று முதல் துவங்கி நடைபெற இருக்கிறது. ஏற்கனவே தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி இந்த டி20 தொடரையும் கைப்பற்றி அசத்தும் என்பதே பலரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.

மாபெரும் சாதனைக்காக காத்திருக்கும் அபிஷேக் சர்மா :

இந்த டி20 தொடருக்கான இந்திய அணியின் துவக்க வீரராக இடம்பெற்றுள்ள அபிஷேக் சர்மா கடந்த ஓராண்டாகவே மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வேளையில் இந்த தொடரிலும் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று பலராலும் நம்பப்படுகிறது.

- Advertisement -

நடப்பு 2025 ஆண்டிற்கான டி20 போட்டிகளில் அபிஷேக் ஷர்மா இந்திய அணிக்காக மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தியுள்ளார். இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்று வரும் சர்வதேச டி20 போட்டிகளில் அவர் மாபெரும் ஒரு இமாலய சாதனையை நிகழ்த்த அற்புதமான வாய்ப்பு அவருக்கு இந்த தொடரில் காத்திருக்கிறது.

அந்த வகையில் அவர் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : இந்த 2025 ஆம் ஆண்டில் டி20 போட்டிகளில் மட்டும் அதிக ரன்கள் அடித்த வீரராக ஜிம்பாப்வே வீரர் பென்னட் 936 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். ஜிம்பாப்வே அணிக்கு இனி டி20 போட்டிகள் இந்த ஆண்டு கிடையாது என்பதனால் அவரை மிஞ்சுவதற்கு அபிஷேக் சர்மாவிற்கு நல்ல வாய்ப்பு காத்திருக்கிறது.

- Advertisement -

இந்த ஆண்டு மட்டும் 17 போட்டிகளில் விளையாடியுள்ள அபிஷேக் சர்மா 756 ரன்களை அடித்துள்ள வேளையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் அவர் மேலும் 182 ரன்கள் அடித்தால் நடப்பு 2025-ல் சர்வதேச டி20 போட்டியில் அதிக ரன்கள் அடித்த பேட்ஸ்மேன் என்ற சாதனையை நிகழ்த்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : டெஸ்ட் போட்டிகளில் ராகுல் டிராவிடின் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித் – விவரம் இதோ

ஏற்கனவே ரோகித் சர்மா டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற வேளையில் தனக்கு கிடைத்த வாய்ப்பு அற்புதமாக பயன்படுத்தி வரும் அபிஷேக் சர்மா டி20 உலக கோப்பை தொடருக்கான துவக்க வீரராகவும் தனது இடத்தை உறுதி செய்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -