ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் ஆஷஸ் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது போட்டியானது கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி பிரிஸ்பேன் நகரில் உள்ள காபா மைதானத்தில் துவங்கி போட்டியின் கடைசி நாளன்று முடிவுக்கு வந்தது. இந்த போட்டியிலும் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இந்த தொடரின் தற்போதைய நிலையில் இரண்டுக்கு பூஜ்யம் (2-0) என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
ராகுல் டிராவிடின் சாதனையை சமன் செய்த ஸ்டீவ் ஸ்மித் :
அதன்படி நடைபெற்று முடிந்த இந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் முதலில் விளையாடிய இங்கிலாந்து அணியானது தங்களது முதல் இன்னிங்சில் 334 ரன்களை குவித்தது. இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஜோ ரூட் 138 ரன்களையும், ஜாக் கிராவுலி 76 ரன்களையும் குவித்து அசத்தினர்.
பின்னர் தொடர்ந்து தங்களது முதல் இன்னிங்க்ஸை விளையாடிய ஆஸ்திரேலியா அணியானது 511 ரன்களை குவித்தது. ஆஸ்திரேலிய அணி சார்பாக ஜேக் வெதரால்டு, லாபுஷேன், ஸ்டீவ் ஸ்மித், அலெக்ஸ் கேரி, மிட்சல் ஸ்டார்க் ஆகியோர் அரைசதம் கடந்த அசத்தியிருந்தனர். பின்னர் தொடர்ந்து தங்களது இரண்டாவது இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து அணி 241 ரன்கள் குவித்தது.
பின்னர் ஆஸ்திரேலியா அணி 69 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் கடைசி இன்னிங்சை விளையாடியது. அதன்படி 10 ஓவர்கள் விளையாடிய ஆஸ்திரேலியா அணி 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 69 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த போட்டியின் போது ஆஸ்திரேலியா அணி சார்பாக விளையாடிய அந்த அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மொத்தமாக 5 கேட்ச்களை பிடித்து அசத்தினார். அவர் பிடித்த இந்த 5 கேட்ச்களின் மூலம் முன்னாள் இந்திய ஜாம்பவானான ராகுல் டிராவிடின் சாதனை ஒன்றினையும் சமன் செய்துள்ளார். அந்த வகையில் அவர் நிகழ்த்திய சாதனை யாதெனில் :
இதையும் படிங்க : இரட்டை சாதனையை தெ.ஆ டி20 தொடரில் நிகழ்த்த காத்திருக்கும் ஹார்டிக் பாண்டியா – விவரம் இதோ
டெஸ்ட் போட்டிகளில் அதிக கேட்ச்களை பிடித்த வீரராக ஜோ ரூட் 213 கேட்ச்களுடன் முதலிடத்தில் இருக்கும் வேளையில் ராகுல் டிராவிட் 210 கேட்ச்களுடன் இரண்டாவது இடத்தில் இருந்தார். இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் 5 கேட்ச்களை பிடித்ததன் மூலம் தற்போது ஸ்டீவ் ஸ்மித்தும் 210 கேட்ச்களுடன் ராகுல் டிராவிட்டின் சாதனையை சமன் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



