இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஹார்டிக் பாண்டியா ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியில் இருந்து வெளியேறினார். அதன்பின்னர் கடந்து சில மாதங்களாகவே சிகிச்சை மற்றும் ஓய்வில் இருந்து வந்த அவர் தற்போது முழு உடற்தகுதியை எட்டி மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளார்.
இரட்டை சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் ஹார்டிக் பாண்டியா :
அந்த வகையில் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட இருக்கும் அவர் இந்த தொடரில் இரட்டை சாதனையை நிகழ்த்த காத்திருக்கிறார். அது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த வகையில் ஹார்டிக் பாண்டியா நிகழ்த்தப் போகும் சாதனை யாதெனில் : இந்திய அணிக்காக இதுவரை 120 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர் 1860 ரன்களையும், 98 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார். இந்நிலையில் இந்த தென்னாப்பிரிக்கா தொடரில் அவர் பேட்டிங்கில் 140 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் 2000 ரன்களை குவித்து சாதனை நிகழ்த்துவார்.
அதேபோன்று பந்துவீச்சில் 2 விக்கெட்டுகளை கைப்பற்றும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இரண்டாவது பந்துவீச்சாளர் என்ற சாதனையும் நிகழ்த்துவார். இப்படி இரட்டை சாதனைகளையும் அவர் இந்த தொடரிலேயே நிகழ்த்த வாய்ப்புள்ளது.
அண்மையில் இந்தியாவில் நடைபெற்று வரும் பிரபல உள்ளூர் தொடரான சையத் முஷ்டாக் அலி தொடரில் பரோடா அணிக்காக விளையாடிய அவர் பேட்டிங்கில் அதிரடி காட்டியது மட்டுமின்றி பந்துவீச்சில் முழு 4 ஓவர்களையும் வீசி தான் முழு உடற்தகுதியுடன் இருக்கிறேன் என்பதை வெளிக்காட்டியிருந்தார்.
இதையும் படிங்க : முதல் இந்திய பந்துவீச்சாளராக இமாலய சாதனையை நிகழ்த்த காத்திருக்கும் – ஜஸ்ப்ரீத் பும்ரா
இவ்வேளையில் நிச்சயம் இந்த தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரிலும் அற்புதமான பார்மை வெளிப்படுத்தி அந்த 2 சாதனைகளையும் செய்து அசத்துவார் என்பது உறுதி. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது போட்டியானது இன்று இரவு 7 மணிக்கு கட்டாக் நகரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.



