- Advertisement -
இந்திய கிரிக்கெட்

பாபரை விட கோலி வேற லெவல்.. அவங்கள விட அந்த இந்தியர் தான் உலகின் சிறந்த பேட்ஸ்மேன்.. அப்துர் ரவூப்

ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி ஒருநாள் கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி பாகிஸ்தானில் துவங்குகிறது. உலகின் டாப் 8 அணிகள் விளையாடும் அந்தத் தொடரில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். அந்தப் போட்டி பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெற உள்ளது. இந்நிலையில் பாபர் அசாம் எப்போதும் விராட் கோலியை நெருங்க முடியாது என முன்னாள் பாகிஸ்தான் வீரர் அப்துர் ரவூப் தெரிவித்துள்ளார்.

ஆனால் அவர்கள் இருவரையும் விட ரோகித் சர்மா தான் உலகின் மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் என்று அவர் வித்தியாசமான கருத்தையும் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “விராட் கோலிக்கு எந்த ஒப்பிடும் கிடையாது. அவருடைய கிளாஸ், கண்சிஸ்டென்சி மற்றும் அழுத்தத்தின் கீழ் அசத்தும் விதம் ஆகியவை அவரை உயர்தரமாக நிறுத்துகிறது”

- Advertisement -

சிறந்த கோலி, ரோஹித்:

“பாபர் அசாம் நல்ல ஃபார்மில் இருக்கும் போது சிறப்பாக இருப்பார். ஆனால் தனிப்பட்ட முறையில் ரோகித் சர்மா எனக்கு மிகவும் பிடித்த பேட்ஸ்மேன். சொல்லப்போனால் உலக கிரிக்கெட்டில் ரோஹித் சர்மா மிகவும் சிறந்த பேட்ஸ்மேன் என்று நான் நம்புகிறேன். அவர் விராட் கோலி மற்றும் பாபர் ஆகியோரை விட பல வகைகளிலும் சிறந்தவர்” என்று கூறினார்.

மேலும் இந்தியா பாகிஸ்தான் போட்டிகளில் யார் வெற்றி பெறுவார் என்பதை உறுதியாகக் கணிக்க முடியாது என்றும் ரவூப் தெரிவித்துள்ளார். ஏனெனில் இரு அணிகளுமே தங்களுடைய நாளில் மிகவும் வலுவான செயல்பாடுகளை வெளிப்படுத்தக்கூடியவை என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் மேலும் பேசியது பின்வருமாறு. “நீங்கள் இந்தியா – பாகிஸ்தான் போட்டிகளின் வெளிப்பாடு உங்களால் கணிக்க முடியாது”

- Advertisement -

கணிக்க முடியாது:

“தற்சமயத்தில் இரு அணிகளும் சமமான பலத்துடன் இருப்பதாக நான் நம்புகிறேன். இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் எப்போதுமே உயர்தரமான அழுத்தத்தைக் கொண்டது. அந்தப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் மட்டுமின்றி உலகளவில் இருக்கும் ரசிகர்கள் முதலீடு செய்வார்கள். இரு அணிகளுமே வலுவாக இருக்கின்றன. எனவே வெற்றியாளரை கணிப்பது மிகவும் கடினம்” என்று கூறினார்.

இதையும் படிங்க: பேலன்ஸ் நிறைந்த இந்தியாவை.. சாய்த்து கோப்பையை வெல்ல பாகிஸ்தான் இதை செய்யனும்.. யூசுப் பேட்டி

இருப்பினும் சமீபத்திய ஐசிசி தொடர்களில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து இந்தியா அதிக வெற்றிகளை பெற்றுள்ளது. எனவே 2017 சாம்பியன்ஸ் டிராபி ஃபைனலில் சந்தித்த தோல்விக்கு பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராக உள்ளது. பாகிஸ்தான் ரசிகர்கள் எப்படியாவது இந்தியாவை தோற்கடிக்க வேண்டும் என்று விரும்புவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -