சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிப்பதற்காக நடைபெற்று வரும் ஐசிசி உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்தியா இதுவரை விளையாடிய முதல் 6 லீக் போட்டிகளிலும் 6 தொடர்ச்சியான வெற்றிகளை பதிவு செய்துள்ளது. அதனால் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் இந்தியா செமி ஃபைனல் சுற்று வாய்ப்பையும் 99% உறுதி செய்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இந்த வெற்றிகளில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி முக்கிய பங்காற்றி வருகின்றனர். குறிப்பாக வேகப்பந்து வீச்சு துறையில் முதன்மை பவுலராக இருக்கும் ஜஸ்பிரித் பும்ரா காயத்திலிருந்து முழுமையாக குணமடைந்து எதிரணிகளை தெறிக்க விடும் வகையில் அபாரமாக செயல்பட்டு தன்னை சாம்பியன் வீரர் என்பதை நிரூபித்து வருகிறார்.
பும்ரா குழந்தை:
அதிலும் குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் வெளிப்படுத்திய செயல்பாடுகளை பார்த்து வியந்த பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் தம்மை விட பும்ரா புதிய பந்துகளில் சிறந்த கட்டுப்பாட்டை கொண்டிருப்பதாகவும் பாகிஸ்தான் பவுலர்களை விட சிறப்பாக செயல்படுவதாகவும் வெளிப்படையாக பாராட்டினார். அதனால் மற்றொரு முன்னாள் வீரர் அப்துல் ரசாக்கை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலாய்த்தனர்.
ஏனெனில் கடந்த பல மாதங்களுக்கு முன்பாக பிரபல பாகிஸ்தான் இணையத்தில் பும்ராவை பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “நான் கிளன் மெக்ராத், வாசிம் அக்ரம் போன்ற மகத்தான பவுலர்களுக்கு எதிராக விளையாடியுள்ளேன். எனவே பும்ரா எனக்கு குழந்தையைப் போன்ற பவுலர். அதனால் எனது காலத்தில் விளையாடியிருந்தால் அவரை நான் எளிதாக அட்டாக் செய்து அடித்து நொறுக்குவேன்” என்று கூறினார்.
இருப்பினும் ரசிகர்கள் விடாமல் கிண்டலடித்ததை தொடர்ந்து தற்போது தாம் அவ்வாறு கூறியதை இந்திய ஊடகங்கள் தவறாக புரிந்து கொண்டு மாற்றி எழுதியதாக அப்துல் ரசாக் புதிய கருத்தை வெளியிட்டுள்ளார். இது பற்றி ஜியோ சூப்பர் எனும் யூடியூப் சேனலில் அவர் தற்போது பேசியுள்ளது பின்வருமாறு. “அவர் நல்ல பவுலர் கிடையாது என்று நான் எப்போதும் சொன்னதில்லை. என்னுடைய கருத்து தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டது”
இதையும் படிங்க: விராட் கோலியோட பாபர் அசாமை கம்பேர் பண்ணாதீங்க ப்ளீஸ். சரியான காரணத்தை சொன்ன – ரமேஸ் ராஜா
“அதாவது கிளன் மெக்ராத், வாசிம் அக்ரம், சோயப் அக்தர் போன்ற பவுலர்களுடன் ஒப்பிடும் போது பும்ராவை நான் எவ்வாறு அழைக்க முடியும்? மேலும் நான் பாகிஸ்தான் அணிக்காக முதல் முறையாக விளையாட சென்ற போது வாசிம் அக்ரமுடன் ஒப்பிடும்போது குழந்தையாகவே இருந்தேன். ஆனால் அதை இந்திய ஊடகங்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப அர்த்த மற்றதை எழுதி விட்டார்கள்” என்று கூறினார். இந்த சூழ்நிலையில் இந்தியா தங்களுடைய அடுத்த போட்டியில் இலங்கையை மும்பையில் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.