ஜாம்பவான் சச்சின் எனக்கு கத்துக்குட்டி மாதிரி, நிறைய டைம் அவுட் பண்ணிருக்கேன் – முன்னாள் பாக் வீரர் தடாலடி பேட்டி

Sachin-1
- Advertisement -

நட்சத்திர முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் இந்தியா உலக வரலாற்றில் மகத்தான வீரராகவும் பேட்ஸ்மேனாகவும் போற்றப்படுகிறார். ஏனெனில் 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாகி இம்ரான் கான், வாசிம் அக்ரம் போன்ற தரமான பவுலர்களை எதிர்கொண்ட அவர் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து நிறைய வெற்றிகளை பெற்றுக் கொடுத்தார். குறிப்பாக 90களில் சச்சின் அடித்தால் தான் வெற்றி பெற முடியும் என்று கருத்திய பல ரசிகர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக பெரும்பாலான போட்டிகளில் மிகச் சிறப்பாக செயல்பட்ட அவர் 1999 கோகோ-கோலா கோப்பை முதல் 2011 உலகக்கோப்பை வரை நிறைய சரித்திர வெற்றிகளில் முக்கிய பங்காற்றினார்.

sachin 2

- Advertisement -

மேலும் ஓரிரு வருடங்கள் நிலையாக விளையாடுவதற்கு தடுமாறும் பல வீரர்களுக்கு மத்தியில் 30000க்கும் மேற்பட்ட ரன்களையும் 100 ததங்களையும் அடித்த அவர் சர்வதேச கிரிக்கெட்டின் பேட்டிங் துறையில் இருக்கும் அனைத்து சாதனங்களையும் இப்போதும் தன்வசம் வைத்துள்ளார். அந்த வகையில் பல இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாக திகழும் அவர் தம்முடைய கேரியரில் ஷேன் வார்னே போன்றவர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு வெற்றிகரமாக செயல்பட்டுள்ளார்.

கத்துக்குட்டி:
அதே சமயம் வல்லவனுக்கு வல்லவன் இருப்பார் என்ற வகையில் பிரட் லீ (14), முத்தையா முரளிதரன் மற்றும் கிளன் மெக்ராத் (தலா 13) ஆகியோர் சச்சினை அதிக முறை அவுட்டாக்கி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளனர். இந்நிலையில் சச்சின் மகத்தான பேட்ஸ்மேன் என்றாலும் தன்னுடைய பவுலிங்கில் கத்துக்குட்டியாக பலமுறை அவுட்டாகியுள்ளதாக முன்னாள் பாகிஸ்தான் ஆல் ரவுண்டர் அப்துல் ரசாக் அதிரடியாக பேசியுள்ளார்.

Razzaq

அதாவது 2000 – 2006 வரையிலான காலகட்டங்களில் நடைபெற்ற ஒருநாள் போட்டிகளில் சச்சினை 6 முறை அவுட்டாக்கி வாசிம் அக்ரம், ஷேன் வார்னே ஆகியோரை விட அதிகமாக அவுட் செய்துள்ள அவர் இது பற்றி சமீபத்திய யூடியூப் நிகழ்ச்சியில் பேசியது பின்வருமாறு. “முதலில் சச்சின் டெண்டுல்கர் அப்போதும் எப்போதும் உலகத்தரம் வாய்ந்த பேட்ஸ்மேன் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இருப்பினும் அதிகப்படியான ரசிகர்களை கொண்டுள்ள அவர் என்னை மிகவும் எதிர்கொள்வதற்கு கடினமான பவுலராக இருந்தார் என்று சொல்ல மாட்டார்”

- Advertisement -

“அவர் எப்போதுமே என்னுடைய பெயரை எடுக்காததை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. தமது கேரியரில் எதிர்கொண்ட கடினமான பவுலர் என்று நீங்கள் கேட்டால் அவர் கிளன் மெக்ராத், வாக்கார் யூனிஸ், ஆம்பூருஸ், வால்ஸ், வாசிம் அக்ரம், முத்தையா முரளிதரன், ஷேன் வார்னே ஆகியோரில் யாரையாவது சொல்லியிருப்பார். அதனால் எனது பெயர் தேவைப்பட்டிருக்காது. அவர் மிகவும் அன்பானவர் என்பதை முன்பே சொல்லியிருக்கிறேன். ஒருமுறை அல்ல அவர் சில முறை கூறினார். சேவாக் கூட அதை செய்தார். பொதுவாக பன்னி (கத்துக்குட்டி) என்பது ஒரு இடியை தொடர்ந்து தொந்தரவு செய்யும் ஒருவர் என்று அர்த்தம். ஆனால் அதை நான் சொல்லி அதிகம் மகிழ்ந்ததில்லை”

Razzaq

“எப்போதுமே பந்து ஸ்விங் ஆகும் பட்சத்தில் மகத்தான பேட்ஸ்மேன்கள் கூட தடுமாறுவார்கள். சச்சின் தான் இந்திய அணியின் ஒன் மேன் ஆர்மி. நாங்கள் இந்தியாவுக்கு எதிராக விளையாடும் போதெல்லாம் எங்களுடைய சீனியர்கள் சச்சினின் விக்கெட்டை எடுங்கள் என்றே சொல்வார்கள். எனவே அவர் தான் எங்களுடைய இலக்காகும். சொல்லப்போனால் ஆஸ்திரேலியாவில் ஒரு முறை நடைபெற்ற சிபி தொடரில் நான் அவரை அவுட்டாக்கினேன். அதே போல் 2006ஆம் ஆண்டு கராச்சியில் இர்பான் பதான் ஹாட்ரிக் எடுத்த போது நாங்கள் எப்படியோ 240 ரன்கள் அடித்தோம்”

இதையும் படிங்க:இந்திய அணியில் இருந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளியேற்றப்படுகிறாரா? – புதிய கோச் லிஸ்டில் 3 பேர் போட்டி

“இருப்பினும் அப்போட்டியில் சச்சின் பேட்டிங் செய்த போது நான் ஆசிப் மற்றும் சமி ஆகியோர் பந்து வீசினோம். அவர்கள் அனைவரும் தங்களுடைய ஸ்பெல்லை முடித்த போது அன்றைய நாளின் முடிவில் 2 ஓவர்கள் மீதமிருந்தது. அப்போது கேப்டன் யூனிஸ் கான் என்னை சச்சினுக்கு எதிராக பந்து வீச அழைத்தார். அந்த சமயத்தில் சச்சினுக்கு எதிராக எப்படி வந்து வீசப் போகிறோம் என்று நான் நினைத்தேன். இருப்பினும் எனக்கு நானே தன்னம்பிக்கையுடன் சரியான இடத்தில் பிட்ச் செய்து சச்சினை போல்ட்டாக்கினேன். அந்தப் போட்டியின் வீடியோவை நீங்கள் பார்த்தால் நான் அவரை முதல் ஓவரிலேயே அவுட் செய்தது தெரியும்” என்று கூறினார்.

Advertisement