இந்திய அணியில் இருந்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் வெளியேற்றப்படுகிறாரா? – புதிய கோச் லிஸ்டில் 3 பேர் போட்டி

Rahul Dravid Virat Kohli
- Advertisement -

இந்திய அணி கடைசியாக 2013-ஆம் ஆண்டு தோனியின் தலைமையில் ஐசிசி கோப்பையை கைப்பற்றி இருந்தது. அதனை தொடர்ந்து கடந்த 10 ஆண்டுகளாக வேறுயெந்த ஒரு ஐசிசி தொடரிலும் இந்திய அணி கோப்பையை கைப்பற்றவில்லை. அதிலும் குறிப்பாக இந்திய அணி ஐ.சி.சி தொடர்களில் லீக் சுற்று போட்டிகளில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் நாக்அவுட் சுற்று போட்டிகளின் போது இந்திய அணி தோல்வியை சந்தித்து வருகிறது.

Rahul Dravid KL Rahul

- Advertisement -

மேலும் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இருமுறை நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றும் இந்திய அணி அந்த இரண்டு போட்டியிலும் தோல்வியை சந்தித்திருந்தது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக சமீபத்தில் நடைபெற்று முடிந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி முடிவடைந்த பின்னர் இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மீது அதிகளவு விமர்சனங்கள் எழுந்துள்ளன. இனியும் அவர் பயிற்சியாளராக தொடர வேண்டுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Fleming 1

ஏனெனில் தற்போதுள்ள இந்திய அணியில் பல மாற்றங்களை அணி நிர்வாகம் கொண்டு வர நினைக்கும் வேளையில் பயிச்சியாளர் பதவியில் இருந்து டிராவிடும் மாற்றப்படலாம் என்று தெரிகிறது. அந்த வகையில் ஒருவேளை டிராவிட் இந்திய அணியின் பயிற்சியாளராக பதவியில் இருந்து மாற்றப்பட்டால் அந்த இடத்திற்கு மூன்று பெயர்கள் பரிசளிக்கப்படும் என்று தெரிகிறது.

- Advertisement -

அந்த வகையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீபன் பிளமிங், இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான நெஹ்ரா மற்றும் இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் ஜெயவர்த்தனே ஆகிய மூன்று பேரும் பரிசளிக்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிஎஸ்கே அணி பிளமிங்-கின் பயிற்சி பலமுறை கோப்பையை வென்றுள்ளது.

இதையும் படிங்க : BAN vs AFG : 21ஆம் நூற்றாண்டில் சரித்திரம் படைத்த வங்கதேசம் – ஆப்கானிஸ்தானை நொறுக்கி புதிய உலக சாதனை

அதேபோன்று நெஹ்ரா தான் பயிற்சியாளராக அறிமுகமான முதல் தொடரிலேயே குஜராத் அணியை சாம்பியன் பட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அதேபோன்று ஜெயவர்த்தனேவும் மும்பை அணி இவ்வளவு பெரிய அணியாக திகழ காரணமாக இருக்கிறார் என்பதனால் இந்த மூவரின் பெயரையும் பரிசளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement