ஆசிய கோப்பையில் இந்தியாவிடம் தோத்தாலும் பரவால்ல அந்த தப்பை மட்டும் செய்யாதீங்க – பாக் அணிக்கு அப்துல் ரசாக் அறிவுரை

Abdul Razzaq
- Advertisement -

ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் செப்டம்பர் 2ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் நடைபெறும் இத்தொடரில் ஏற்கனவே பாகிஸ்தான் தன்னுடைய முதல் போட்டியில் நேபாளை அடித்து நொறுக்கி பெரிய வெற்றியை பதிவு செய்து 2 புள்ளிகளை பெற்று உங்களை உலகின் நம்பர் ஒன் அணி என்பதை காட்டியது. அதன் தொடர்ச்சியாக 2வது போட்டியிலும் பரம எதிரி இந்தியாவை தோற்கடித்து சூப்பர் 4 சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெறும் முனைப்புடன் பாகிஸ்தான் தயாராகி வருகிறது.

மேலும் கேஎல் ராகுல் போன்ற சில முக்கிய வீரர்கள் காயத்தை சந்தித்திருப்பதால் இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்டிங் பலவீனமாகவே பார்க்கப்படுகிறது. மறுபுறம் காயங்கள் எதுவும் இல்லாமல் ஃபிட்டான அணியாக திகழும் பாகிஸ்தான் ஹரிஷ் ரவூப், நசீம் ஷா போன்ற தரமான வேகப்பந்து வீச்சாளர்களுடன் பந்து வீச்சு துறையில் வலுவான அணியாக திகழ்கிறது. அதிலும் குறிப்பாக இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ரோகித் சர்மா, விராட் கோலி என நிறைய வலது கை பேட்ஸ்மேன்களே நிறைந்திருக்கிறார்கள்.

- Advertisement -

மாற்றம் செய்யாதீங்க:
எனவே தற்சமயத்தில் நல்ல ஃபார்மில் இருக்கும் இடது கை வேகப்பந்து வீச்சாளரான சாகின் அப்ரிடி அவர்களுக்கு பெரிய சவாலை கொடுத்து இந்தியாவை தோற்கடிக்க அதிக வாய்ப்புள்ளதாக நிறைய முன்னாள் வீரர்கள் கணித்து வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவை விட இந்த ஆசிய கோப்பையில் பாகிஸ்தான் நல்ல பேலன்ஸ் நிறைந்த அணியாக இருப்பதாக முன்னாள் வீரர் அப்துல் ரசாக் பாராட்டியுள்ளார். அதனால் 100% செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் நிச்சயம் வெற்றி காண முடியும் என்று தெரிவிக்கும் அவர் ஒருவேளை தோற்றால் அதற்காக விளையாடும் 11 பேர் அணியில் மாற்றங்களை செய்ய வேண்டாம் என்று பாகிஸ்தானை கேட்டுக் கொண்டுள்ளார்.

“இந்தியாவுக்கு எதிரான இந்த போட்டி பாகிஸ்தானுக்கு நல்ல தயாராகும் இடமாகவும் தன்னம்பிக்கையை கொடுக்கும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் போட்டி எப்போதுமே உச்சகட்டமான பரபரப்புடன் இருக்கும். அதில் எப்போதுமே நாங்கள் எங்களுடைய 100% செயல்பாடுகளை வெளிப்படுத்த விரும்புவோம். அதை தற்போதைய அணியும் வெளிப்படுத்தும் என்று நம்புகிறேன்”

- Advertisement -

“மேலும் தற்போதைய பாகிஸ்தான் 11 பேர் அணி பேலன்ஸ் நிறைந்ததாக இருக்கிறது. உங்களிடம் நல்ல பேட்ஸ்மேன்கள் மற்றும் மிடில் ஆர்டரில் ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர். மேலும் வேகம் மற்றும் சுழல் பந்து வீச்சு துறையில் நீங்கள் பலமாக இருக்கிறீர்கள். எனவே அனைத்தையும் கொண்டிருக்கும் நீங்கள் இந்த கலவையை சிறப்பாக பயன்படுத்தி இதே அணியை தொடர வேண்டும்”

இதையும் படிங்க: ஆசிய கோப்பையில் இந்திய அணிக்கு எதிராக என்னோட கேம் பிளான் இது தான் – ஷாஹீன் அப்ரிடி மறைமுக எச்சரிக்கை

“அதனால் ஒருவேளை நாம் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் தோற்றாலும் நீங்கள் தற்போது அணியை மாற்றக்கூடாது. ஏனெனில் தற்சமத்தில் இதுவே சிறந்த அணியாக இருக்கிறது” என்று கூறினார். இதையடுத்து வெற்றி காண்பதற்காக போட்டி நடைபெறும் பல்லக்கேல் நகரில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் வலைப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement