ஐ.பி.எல்-ன் போது பெங்களூருக்கு நேரில் வந்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்பேன் – ஏ.பி.டி வில்லியர்ஸ் உருக்கம்

ABD
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான ஏபிடி வில்லியர்ஸ் மூன்று விதமான கிரிக்கெட்டிலும் தென்னாப்பிரிக்க அணிக்காக பல வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர். அதோடு சர்வதேச கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகளை படைத்த அவர் தனது அதிரடியான ஆட்டத்தின் மூலம் கடந்த பல ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள பல கோடி ரசிகர்களின் மனதை வென்றவர். மைதானத்தின் அனைத்து திசைகளிலும் எளிதாக சிக்ஸர் அடிக்கும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிஸ்டர் 360 என்ற பட்டமும் உள்ளது.

ABD-1

- Advertisement -

தென்னாப்பிரிக்க ரசிகர்கள் மட்டுமில்லாமல் உலக அளவில் உள்ள ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த வீரராக திகழ்ந்த டிவில்லியர்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் மட்டும் 157 போட்டிகளில் விளையாடி உள்ள அவர் 4552 ரன்களை குவித்து அசத்தியுள்ளார்.

அதில் இரண்டு சதங்களும், 37 அரை சதங்களும் அடங்கும். இந்நிலையில் ஏ.பி.டி கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்தும், அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்த பிறகு ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர்.

அதனை தொடர்ந்து தற்போது இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரின் போது நான் நேரடியாக பெங்களூரு வந்து ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்க போகிறேன் என்று ஏபிடி வில்லியர்ஸ் சில நெகிழ்ச்சியான கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : இந்த வருடம் ஐபிஎல் தொடர் இந்தியாவில் நடைபெறும் போது நான் நேரடியாக பெங்களூரு சின்னசாமி மைதானத்திற்கு வருவேன்.

- Advertisement -

அங்கு வருவது விளையாடுவதற்காக அல்ல. பெங்களூரு ரசிகர்களிடம் ஐபிஎல் கோப்பையை வென்று கொடுக்க முடியாமல் போனதற்கு என்னுடைய மன்னிப்பை கேட்க உள்ளேன். மேலும் கடந்த பல ஆண்டுகளாக எனக்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவும், அன்பும் அளப்பரியது. அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்க கடமைப்பட்டிருக்கிறேன். இனிமேல் என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது.

இதையும் படிங்க : இந்த 2 பிரச்சனையை சரி செய்யலனா வேர்லடு கப் கஷ்டம் தான் – ரவி சாஸ்திரி எச்சரிக்கை

ஏனெனில் என்னுடைய வலது கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளேன். லெஜன்ட்ஸ் கிரிக்கெட்டில் கூட எனக்கு விளையாட அழைப்பு விடுத்தார்கள். ஆனால் கண்ணில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அந்த வாய்ப்பையும் மறுத்து விட்டதாக ஏ.பி.டி கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement