- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ரோஹித் கோலியை இப்படி போட்டு அழுத்தாதீங்க.. அவங்கள கொண்டாட வேண்டிய நேரம் இது – ஏ.பி.டி கருத்து

இந்த ஆண்டு ஆரம்பத்தில் நடைபெற்ற 2025 சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரை வென்ற பின்னர் கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு பிறகு தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களும், அனுபவ வீரர்களுமான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்தனர். அதனால் இந்த தொடரானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்திருந்தது.

ரசிகர்கள் அவங்க 2 பேரையும் கொண்டாட வேண்டும் : ஏ.பி.டி

இந்த ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரினை பொறுத்தவரை முதல் போட்டியில் 8 ரன்களில் ரோகித் சர்மா ஆட்டம் இழந்திருந்தாலும், இரண்டாவது போட்டியின் போது அரைசதம் அடித்த அவர் மூன்றாவது போட்டியிலும் சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச்சென்று மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி தொடர் நாயகன் விருதினை வென்றிருந்தார்.

- Advertisement -

அதே வேளையில் மறுபுறம் விராட் கோலி முதல் 2 போட்டிகளில் டக் அவுட்டாகி இருந்தாலும் மூன்றாவது போட்டியில் 74 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். இப்படி அனுபவ வீரர்களான இவர்கள் இரண்டு பேரும் எவ்வாறு விளையாடப்போகிறார்கள் என்று பலரும் எதிர்பார்த்த வேளையில் இந்த தொடரினை சிறப்பாகவே அவர்கள் நிறைவு செய்துள்ளனர்.

அதனால் இனிவரும் அடுத்தடுத்த ஒருநாள் தொடர்களில் அவர்கள் தொடர்ந்து விளையாட இருக்கின்றனர். இந்நிலையில் இந்திய அணியின் அனுபவ வீரர்களான அவர்கள் இருவரது திறனை சோதிப்பது தவறு என்றும் அவர்கள் மீது அழுத்தத்தை கொடுக்காமல் அவர்களை ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஏபிடி தனது கருத்தினை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதுகுறித்து பேசிய அவர் கூறுகையில் : மக்கள் ஏன் அவர்கள் இருவரின் திறமையின் மீது சந்தேகம் வைக்கிறார்கள்? என்று தெரியவில்லை. ஏனெனில் நாட்டுக்காக இத்தனை ஆண்டு காலம் மிகச்சிறப்பான பங்களிப்பை வழங்கிய அவர்கள் இருவரையும் கொண்டாடிய வேண்டிய தருணம் இது. தங்களது கரியரின் கடைசி கட்டத்தில் இருக்கும் அவர்கள் இருவரது மீது கடைசி சில மாதங்களாக நிறைய விமர்சனங்கள் உள்ளன.

இதையும் படிங்க : டி20 தொடரை கைப்பற்றப்போவது யார்? இந்தியா ஆஸ்திரேலியா தொடர் குறித்து – ஜாஹீர் கான் கணிப்பு

ஆனால் அவற்றை எல்லாம் தள்ளி வைத்துவிட்டு அவர்கள் இருவரையும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும். ஒரு சில இடங்களில் இருந்து அவர்களுக்கு அழுத்தம் வந்தாலும் பெரும்பாலான ரசிகர்கள் அவர்களை கொண்டாட வேண்டும் என ஏபிடி கூறியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -