டி20 தொடரை கைப்பற்றப்போவது யார்? இந்தியா ஆஸ்திரேலியா தொடர் குறித்து – ஜாஹீர் கான் கணிப்பு

Zaheer Khan
- Advertisement -

ஆஸ்திரேலிய நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது தற்போது அந்நாட்டு அணிக்கெதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி முடித்துள்ளது. இந்த ஒருநாள் தொடரை இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி கைப்பற்றி அசத்தியது. அதனை தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை மறுதினம் அக்டோபர் 29-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெறயிருக்கிறது.

டி20 தொடரை கைப்பற்றப்போகும் அணி எது? : ஜாஹீர் கான் கணிப்பு

இந்த சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை இந்திய அணி இழந்து விட்டதால் அடுத்ததாக நடைபெறயிருக்கும் இந்த டி20 தொடரை கைப்பற்றும் முனைப்புடன் இந்திய அணி தீவிரமாக தயாராகி வருகிறது. அதன் காரணமாக இந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது ரசிகர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது.

- Advertisement -

அதோடு டி20 சாம்பியனான இந்திய அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் எதிர்கொள்வதாலும் இந்த தொடரானது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இந்த டி20 தொடருக்கு முன்னதாக பல்வேறு முன்னாள் வீரர்களும் இந்த தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? என்பது குறித்த தங்களது கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ஜாஹீர் கானும் எதிர்வரும் இந்த டி20 தொடரில் வெற்றி பெறப்போகும் அணி எது? சிறப்பாக விளையாடப்போகும் வீரர்கள் யார்? என்பது குறித்த தனது கணிப்பினை வெளிப்படுத்தியுள்ளார். அவரது இந்த கணிப்பு ரசிகர்கள் மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.

- Advertisement -

அந்த வகையில் ஜாஹீர் கான் அவர்களது கணிப்பின் படி கூறியதாவது : இந்த 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணியே கைப்பற்றும். அதோடு இந்த தொடரில் இந்திய அணி சார்பாக அபிஷேக் சர்மா சிறப்பாக செயல்படுவார் என்றும் ஆஸ்திரேலியா அணி சார்பாக டிராவிஸ் ஹெட் சிறப்பாக செயல்படுவார் என்றும் ஜாஹீர் கான் கணித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா ஆஸ்திரேலியா டி20 தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல் – மாற்று வீரர் அறிவிப்பு

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நாளை மறுதினம் அக்டோபர் 29-ஆம் தேதி கான்பெரா நகரில் நடைபெறயிருக்கிறது. இந்த போட்டியானது இந்திய நேரப்படி மதியம் 1:45 மணிக்கு துவங்கும் என்றும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட் ஸ்டார் வாயிலாகவும் காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement