இந்தியா ஆஸ்திரேலியா டி20 தொடரில் இருந்து முக்கிய வீரர் விலகல் – மாற்று வீரர் அறிவிப்பு

Adam Zampa
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரானது அண்மையில் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று முடிந்தது. இந்த தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணியானது இரண்டுக்கு ஒன்று (2-1) என்ற கணக்கில் அந்த தொடரை கைப்பற்றி இருந்தது. அதற்கடுத்து தற்போது இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது நடைபெற உள்ளது.

டி20 தொடரில் இருந்து விலகிய நட்சத்திர வீரர் :

இதன் காரணமாக தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை சேர்ந்த 2 அணி வீரர்களும் தீவிர பயிற்சினை மேற்கொண்டு வருகின்றனர். எதிர்வரும் இந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரானது நாளை அக்டோபர் 29-ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற இருக்கிறது.

- Advertisement -

டி20 கிரிக்கெட்டின் சாம்பியனான இந்திய அணியும், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியும் மோத இருப்பதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பும் தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தை தொட்டுள்ளது. இந்நிலையில் இந்த டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்த நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ஆடம் ஜாம்பா தனிப்பட்ட காரணங்களால் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அப்படி டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியிலிருந்து ஆடம் ஜாம்பா விலகியுள்ளதால் அவருக்கு பதிலாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளரான ஜேசன் சங்கா ஆஸ்திரேலிய அணியில் மாற்று வீரராக இடம் பிடித்துள்ளார். ஏற்கனவே இந்திய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியை தவறவிட்ட ஆடம் ஜாம்பா இரண்டாவது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் விளையாடியிருந்தார்.

- Advertisement -

இவ்வேளையில் தற்போது டி20 தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளார். இதற்கு காரணம் யாதெனில் : அவரும் அவரது மனைவியும் தங்களது இரண்டாவது குழந்தையின் பிறப்பிற்கு காத்திருக்கின்றனர். அதன் காரணமாகவே இந்த முடிவினை ஆடம் ஜாம்பா கையில் எடுத்துள்ளார்.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவின் ஆல்டைம் டி20 சாதனையை தகர்க்க காத்திருக்கும் பாபர் அசாம் – விவரம் இதோ

அவருக்கு பதிலாக தற்போது அணியில் இடம் பிடித்துள்ள ஜேசன் சங்கா இதுவரை 7 டி20 போட்டிகளில் விளையாடி 10 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அதிலும் குறிப்பாக அண்மையில் இந்திய ஏ அணிக்கு எதிராக விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணியில் இடம் பிடித்திருந்த அவர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி 7 விக்கெட்டுகளை எடுத்து அனைவரது கவனத்தையும் ஈர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement