ரோஹித் சர்மாவின் ஆல்டைம் டி20 சாதனையை தகர்க்க காத்திருக்கும் பாபர் அசாம் – விவரம் இதோ

Babar Azam and Rohit
- Advertisement -

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக சொந்த மண்ணில் நடைபெற்று முடிந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்று விளையாடியிருந்த பாகிஸ்தான் அணியானது 2 போட்டிகள் கொண்ட அந்த டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. அடுத்ததாக தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் அடுத்தடுத்து பங்கேற்று விளையாட இருக்கிறது.

ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் பாபர் அசாம் :

இந்த டி20 தொடருக்கான முதலாவது போட்டியானது நாளை அக்டோபர் 28-ஆம் தேதி ராவல்பிண்டி நகரில் துவங்க இருக்கிறது. இந்த டி20 தொடருக்கான பாகிஸ்தான் அணியில் மீண்டும் அந்த அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாம்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடந்த ஓர் ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மீண்டும் அவர் டி20 போட்டிகளில் விளையாடவுள்ளார்.

- Advertisement -

கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து பாகிஸ்தான் டி20 அணிக்காக அவர் விளையாடாமல் இருந்த வேளையில் அதற்கிடையில் பாகிஸ்தான் அணி 26 டி20 போட்டிகளில் விளையாடி விட்டது. இந்நிலையில் நாளைய போட்டியில் களமிறங்க இருக்கும் பாபர் அசாம் ரோகித் சர்மாவின் ஆல்டைம் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்பின் அருகில் இருக்கிறார்.

அந்த வகையில் பாபர் அசாம் நிகழ்த்தப்போகும் சாதனை யாதெனில் : பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகமான பாபர் அசாம் இதுவரை அந்த அணிக்காக 128 டி20 போட்டிகளில் விளையாடி 39 ரன்கள் சராசரியுடன் 129 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 4223 ரன்களை குவித்து சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்களை அடித்த வீரர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

- Advertisement -

இந்த பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் வீரரான ரோகித் சர்மா 4231 ரன்களுடன் டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக முதலிடத்தில் இருக்கும் வேளையில் அவரது இந்த சாதனையை முறியடிக்க பாபர் அசாமிற்கு இன்னும் 9 ரன்கள் மட்டுமே தேவை. அதனால் அடுத்த போட்டியில் அவர் 9 ரன்களை அடிக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரராக பாபர் அசாம் மாறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான டி20 தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? – விவரம் இதோ

பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டனான பாபர் அசாம் கடந்த சில ஆண்டுகளாகவே மோசமான பார்ம் காரணமாக பெரிய சரிவை சந்தித்த வேளையில் தற்போது படிப்படியாக அதிலிருந்து மீண்டு வந்து பாகிஸ்தான் அணியில் நிரந்தர இடத்தினை பிடிக்க போராடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement