விராட் கோலி அப்படி ஒரு முடிவை எடுத்திருந்தா அது கண்டிப்பா சரியானதான் இருக்கும் – ஏ.பி.டிவில்லியர்ஸ் கருத்து

ABD
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியானது ஜனவரி 25-ஆம் தேதி ஹைதராபாத் நகரில் துவங்க உள்ளது. இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான முதல் இரண்டு போட்டிகளுக்கான இந்திய அணி மட்டுமே பி.சி.சி.ஐ-யின் மூலம் கடந்த வாரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

அப்படி அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் இருந்து முன்னணி வீரரான விராட் கோலி கடைசி நேரத்தில் சொந்த காரணங்களால் விளங்கியதாக பிசிசிஐ அறிவித்தது. அதோடு விராட் கோலி தனது விலகல் குறித்து ரோகித் சர்மா மற்றும் அணியின் பயிற்சியாளர் டிராவிடிடம் பேசிய பின்னரே முடிவு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

- Advertisement -

இந்நிலையில் விராட் கோலி இப்படி திடீரென இந்த டெஸ்ட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்த கேள்வி அனைவரது மத்தியிலும் இருந்து வருகிறது. அதே வேளையில் ஒரு சிலர் விராட் கோலியின் இந்த விலகல் குறித்து சில கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் தென் ஆப்பிரிக்கா அணியின் முன்னாள் வீரரான ஏபிடி வில்லியர்ஸ் கூறுகையில் :

யார் ஒருவருக்குமே விராட் கோலி ஏன் விலகினார்? என்று தெரியாது. இருந்தாலும் அதனை நான் சீக்கிரமாக தெரிந்து கொண்டு கூறுகிறேன். ஒருவேளை விராட் கோலி தனிப்பட்ட காரணங்களுக்காகத்தான் விலகி இருந்தால் என்றால் நிச்சயம் அது ஒரு நல்ல காரணத்துக்காக தான் இருக்கும் .அதே போன்று அவர் தொடர்ச்சியாக ஓய்வின்றி போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருவதால் அவர் சற்று சோர்வாகவும் இருக்கலாம்.

- Advertisement -

அதே போன்று அவரது குடும்பத்திற்காகவும் நேரத்தை ஒதுக்க நினைத்திருக்கலாம். எது எப்படி இருப்பினும் நான் அதனை தெரிந்து கொண்டு உங்களுக்கு கூறுகிறேன். அதோடு விராட் கோலியின் நட்பு என்பது எனக்கு மிக முக்கியமான ஒன்று என ஏ.பி.டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியாவுக்கு டஃப் கொடுக்க எங்களோட அந்த ஒரு பவுலரே போதும்.. இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ்

சொந்த மண்ணில் இதுவரை விராட் கோலி 60 ரன்கள் சராசரியுடன் மிகச் சிறப்பாக விளையாடி வருகிறார். அதோடு அவரது ஒட்டுமொத்த கரியரிலேயே இதுவரை 5 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே அவர் இந்திய மண்ணில் விளையாடாமல் இருந்துள்ளார். விராட் கோலிக்கு பதிலாக உள்ளூர் கிரிக்கெட்டில் மத்திய பிரதேச அணிக்காக அசத்தி வரும் ரஜத் பட்டிதார் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement